​பொதுவானவை

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா?

 

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டுமா? திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பது நமது முன்னோர்களின் கூற்று, அந்த திருமண வாழ்வு செழிப்பாக இருப்பதும் வெற்றிகரமாக அமைவதும் பெரும்பாலும் இந்திய திருமணங்களில் தான் என கூறப்படுகிறது. இந்திய திருமணங்கள் வெற்றிகரமாக அமைய பற்பல காரணங்கள் உள்ளது.

* இந்தியாவில் பெரும்பாலும் குடும்பத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களே நடைபெற்று வருவதால் அயல்நாடுகளை போல் விவாகரத்து அதிகம் இல்லை.

* இரண்டு குடும்பங்கள் இணைந்து திருமணத்தை நடத்தி வைப்பதால், தம்பதியினர் சம்மந்தப்பட்ட சின்ன சின்ன விடயங்களிலும் அவர்களது பெற்றோர் ஆலோசனை கூறுவர். இதனால் திருமண வாழ்க்கை செழிக்கும்.

* இந்திய திருமணங்களில், ஆண்களை விட பெண்களே அதிகளவில் சமரசமடைவார்கள். ஏனெனில் ஆணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள திருமணத்திற்கு முன் அவளே தான் வாழ்க்கையை எடுத்து வைக்கிறாள்.

* மத்தியிலான நிரந்தரமான ஒப்பந்தம் இது – எழுதி முத்திரை குத்தப்படுவதால் நிரந்தரமாக இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. இதனால் கூட திருமண வாழ்வு வெற்றிகரமாக அமைகிறது என்று சொல்லலாம்.

* வாழ்வில் எத்தனையோ இன்னல்கள் வந்தாலும் சாகும் வரை சேர்ந்திருப்போம் என்ற உறுதியை தம்பதிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.

* குழந்தைகளின் நலன் கருதி, அவர்களின் வாழ்க்கை சிதறிவிடக்கூடாது என்பதற்காக பெரும்பாலனோர் சேர்ந்து வாழ்கின்றனர். இதனால் விவாகரத்து தவிர்க்கப்படுகிறது.

* ஆண்களின் ஈகோ மற்றும் கோபத்தை பெண்கள் பொறுத்து கொண்டு மரியாதை தருவதால் திருமண வாழ்வு இனிக்கிறது. இந்த காரணங்களை பலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரியோர்களால் நிச்சயக்கப்பட்ட திருமணமே சிறந்து விளங்கும் என்பது உண்மை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button