தொப்பையை குறைக்கும் இயற்கை மருத்துவம்

gooseberries-11தொப்பையை குறைக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கரிகள் மற்றும் கீரைகள் கொண்டு சுலபமாக செய்யலாம்.

நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

அருகம்புல் சாரெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

சோம்பை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

மேலும் வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி,எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசினி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

Leave a Reply