மருத்துவ குறிப்பு

அடக்க வேண்டிய உணர்வுகள்

அடக்க வேண்டிய உணர்வுகள்
மனிதனிடம் தோன்றும் இயற்கையான உணர்வுகளை ‘வேகம்’ என்று அழைக்கிறது ஆயுர்வேதம். இந்த வேகம் உடல் சம்பந்தமாகவோ அல்லது மனம் சம்பந்தமாகவோ இருக்கலாம். வேகத்தை ‘தாரணீய வேகம்’ என்றும், ‘அதாரணீய வேகம்’ என்றும் பிரிக்கிறார்கள். ‘தாரணீய வேகம்’ என்றால் அடக்க வேண்டிய உணர்வுகள் என்று பொருள்.உதாரணமாக கோபம், போட்டி, பொறாமை, வஞ்சகம், காமம் போன்றவை அடக்கி நெறிமுறைப்படுத்த வேண்டியவை. ‘அதாரணீய வேகம்’ என்றால் தடுக்கக்கூடாத உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்று பொருள். பசி, தும்மல், தண்ணீர் தாகம், அபான வாயு, மலம், சிறுநீர், இருமல், தூக்கம், மேல்மூச்சு, கொட்டாவி, கண்ணீர், வாந்தி, சுக்லம் ஆகியவையாகும்.அபான வாயுவையும், மலத்தையும் அடக்கினால் வயிற்றுவலி, பசியின்மை, பார்வைக்குறைவு, இருதய நோய்கள், தலைவலி போன்றவை ஏற்படும். மலத்தை அடக்குவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சிறுநீரை அடக்கினால் நீர்க்கடுப்பு, எரிச்சல், வலி, சக்தியின்மை போன்றவை ஏற்படும். அவ்வாறு அடக்க நேர்ந்தால் உடனடி பாதிப்பு தெரியாவிட்டாலும் நிறைய நோய்கள் வந்தடையும்.

ஏப்பம், தும்மல் அடக்கினால் தலைவலி, கழுத்துவலி போன்றவை ஏற்படும். தலைவலி, ஜலதோஷம், மூச்சு முட்டு, ஆசனக்கடுப்பு, நெஞ்சுவலி போன்றவை படையெடுக்கும். தண்ணீர் தாகத்தை அடக்கப் பழகிவிட்டால் ‘நாவறட்சி’ ஏற்பட்டு ‘டீஹைட்ரேஷன்’ உண்டாகும். தலைசுற்றல், மயக்கம் வரும்.

தூக்கம் என்பது மனித ஆரோக்கியத்தில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. தூக்கம் வரும் போது உடனே தூங்கி விடுவது நல்லது. இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடியற்காலை குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழகுவது சிறப்பானது. வேலைக்காக இரவில் விழித்திருப்பது பின்னாளில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதைத்தான் தலாய்லாமா மனிதனின் விசித்திர பழக்கம் என்று குறிப்பிட்டார். ‘‘இளமையில் இரவு, பகல் பாராமல் உழைத்து பணத்தை சேர்க்கிறான். சரியான தூக்கம், ஓய்வு இல்லாததால் விரைவிலேயே உடல்நலத்தை கெடுத்துக்கொள்கிறான். பின், தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் செலவு செய்து தொலைந்த உடல்நலத்தை மீட்கிறான்’’ என்றார். உண்மைதான்.

மனிதன் சரியான ஓய்வு சரியான தூக்கம் போன்றவற்றை இளமையில் இருந்தே கடைபிடித்தால் பின்னாளில் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய வேண்டியதில்லை. கூட்டிக்கழித்துப் பார்த்தால் உடலை கெடுத்து இளமையில் சம்பாதிக்கும் பணம் பின்னாளில் அந்த உடல் ஆரோக்கியத்திற்கு செலவாகிறது. அதனால் ‘தேவையான அளவு உழைத்து ஆரோக்கியத்தை காப்போம்’ என்கிறது ஆயுர்வேதம்.

Related posts

ஆண் பெண் மூளை வித்தியாசம்

nathan

சர்க்கரை நோய்: தவறுகளும் உண்மைகளும்

nathan

பெண்களுக்கு எந்த வயதில் கருத்தரிக்க வாய்ப்பு அதிகம் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

உங்களுக்கு தெரியுமா ஒற்றைத் தலைவலி வருவது எதனால்?

nathan

மரிஜுவானா எனப்படும் கஞ்சாவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்!!!

nathan

சளி காய்ச்சல் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிஞ்சிக்கங்க…

nathan

பல், சொறி, சிரங்கு பிரச்சனைகளை குணமாக்கும் பிரமந்தண்டு

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரககற்கள் நிரந்தரதீர்வு மற்றும் ஆச்சரியப்படுத்தும் மருத்துவகுணங்கள்

nathan

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

nathan