ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மணி பிளாண்ட் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

மணி பிளாண்ட் என்றால் என்னவென்று யாருக்கும் விளக்கம் கொடுக்க தேவையில்லை. கொடிவகை செடியான இதனை காணாதவர்களே இருக்க முடியாது. இரண்டில் ஒரு வீட்டில் கண்டிப்பாக மணி பிளாண்ட் வளர்க்க தவறுவதில்லை. அதனால் பல வீடுகளில் செழிப்பாக வளர்ந்த நிலையில் மணி பிளாண்ட்டை காண நேரிடலாம். அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படும் மணி பிளாண்ட் சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது. மணி பிளாண்ட்டை மலபார் செஸ்ட்நட் அல்லது சபா நட என்றும் அழைப்பார்கள். மணி பிளாண்ட்டை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது.

மணி பிளாண்ட்டை வீட்டில் வளர்க்க பல காரணங்கள் உள்ளது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரப்படி அதிர்ஷ்டம் ஏற்படுத்தி கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது மணி பிளாண்ட். இது பண வளத்தை பெருகச் செய்து நல்வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும். இருப்பினும் வீட்டிற்கு அழகு சேர்க்கும் வகையில் இதனை வீட்டிற்கு உள்ளேயும் வளர்க்கலாம். வீட்டில் மணி பிளாண்ட் இருந்தால் அதனைப் பற்றி நாங்கள் கூறப்போகும் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியங்களை ஏற்படுத்தும்.

இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்:

1. வனப்பகுதியில் வளரும் மணி பிளாண்ட் 50-60 அடி உயர மரமாக வளரக் கூடும். இருப்பினும் ஒரு சின்ன தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி உயரத்தை தான் அதனால் எட்ட முடியும். மணி பிளாண்ட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களில் இது முக்கியமான ஒன்றாகும்.

2. மணி பிளாண்ட்டின் ஒவ்வொரு கிளைகளிலும், 12 இன்ச் நீளம் வரை வளரக் கூடிய 5 இலைகள் இருக்கும். அவைகள் பளிச்சென்ற பச்சை நிறத்தில் பளபளவென இருக்கும்.

3. மணி பிளாண்ட்டில் உள்ள க்ரீமி வெண்ணிற பூக்கள் வீரியமிக்க வாசனையை பரப்புவதால், அவை தேனீக்கள், வௌவால்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளை ஈர்க்கும்.

4. இன்னொரு ஆச்சரியமான தகவல் – மணி பிளாண்ட்டில் விதைகள் இருப்பது. நமக்கு தெரிந்த வரை மணி பிளாண்ட்டை சுற்றி எந்த விதைகளையும் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் செடியின் விதைப்பையில் விதைகள் இருக்கும். இந்த விதைகள் மெதுவாக பெரிதாகி, பின் வெடித்து கீழே விழும்.

5. மணி பிளாண்ட் கிளைகளில் காணப்படும் 5 இலைகள் ஐந்து சின்னங்களை குறிக்கும். ஃபெங் சூய் சாஸ்திரப்படி, ஒரு கிளையில் காணப்படும் ஐந்து இலைகள் ஐந்து பொருட்களை குறிக்கிறது: உலோகம், கட்டை, நீர், நெருப்பு மற்றும் பூமி. இந்த ஐந்து சின்னங்கள் செடி வைத்திருப்பவருக்கு நல்ல வளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.

6. மணி பிளாண்ட்டின் நற்பதமான இலையை உட்கொள்ள பயன்படுத்தலாம் என்பதும் ஒரு ஆச்சரியமான விஷயமே. அதன் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கலாம் அல்லது வேறு பொருட்கள் சமைக்கும் போது இதனை சேர்த்து கொள்ளவும் செய்யலாம்.

7. மணி பிளாண்ட்டின் விதைகளையும் கூட உண்ணலாம். மணி பிளாண்ட்டின் விதைகள் கடலை பருப்பு சுவையை போல் இருக்குமாம். இந்த விதைகளை ரோஸ்ட் செய்து, நொறுக்குத் தீனியாகவும் சிலர் சாப்பிடுவார்கள். மேற்கூறிய இவைகள் தான் மணி பிளாண்ட்டை பற்றிய அறிய தகவல்கள். இவைகளை இதற்கு முன் கேள்வி பட்டிருக்கிறீர்களா?

அனைவருக்கும் பகிருங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button