மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…மூல நோய் ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

பைல்ஸ் என்பது ஆசன வாயில் உள்ள நரம்புகளில் வீக்கம் மற்றும் கடுமையான வலியை ஏற்படுத்தும் கொடுமையான பிரச்சனையாகும்.

ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால், ஆசன வாயில் இரத்தக்கசிவு, மலம் கழிக்கும் போது வலி, இரத்தம் கலந்த மலம், அடிவயிற்று வலி, மலச்சிக்கல் மற்றும் ஆசன வாயில் அரிப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவார்.

பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்க முடியும். அதுவே கண்டு கொள்ளாமல் விட்டால், ஆசன வாயில் புண் மற்றும் புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.[penci_ads id=”penci_ads_1″]

பைல்ஸ் எந்த காரணங்களால் ஒருவருக்கு ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்:

மூல நோய்கள் பல வகைப்படும். இந்த பிரச்சனை 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகமாக பாதிக்கிறது. ஆனால், தற்போது சில இளம் வயதினருக்கு கூட இப்பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மூல நோயானது ஆசனவாய் மற்றும் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீக்கமடைந்து புண்ணாக்கும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, மலச்சிக்கல், நார்ச்சத்து குறைவான டயட்டை மேற்கொள்தல்,

அளவுக்கு அதிகமாக எடையை தூக்குதல், உணவு அலர்ஜி, உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், கர்ப்பம் மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றகளால் ஏற்படுகிறது.

மலம் கழிக்க முடியாமல், கழிவறையில் நீண்ட நேரம் அமர்ந்து மலம் கழிக்க முயற்சித்தால், ஆசன வாயில் உள்ள நரம்புகள் காயமடையும். இது பைல்ஸை உண்டாக்கும்.

எண்ணெய் பலகாரங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் கூட மலம் இறுக்கமடையும். இதுவும் பைல்ஸ் வருவதற்கு காரணமாகிறது.

மலச்சிக்கலால் குடலில் மலம் பல நாட்களாக தேங்கிவிடும். ஒரு கட்டத்தில் அதை வெளியேற்றும் போது, அதனால் ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும். இதனால்கூட பைல்ஸை உண்டாக்கும்.[penci_ads id=”penci_ads_1″]

கர்ப்ப காலத்திலும் பைல்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் வயிற்றில் உள்ள குழந்தை மலக்குடலில் அதிக அழுத்தம் கொடுக்கும் போது, ஆசன வாயில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகிறது. இதனால்கூட பைல்ஸ் வருகிறது.

வயிற்றுப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ச்சியாக மலம் க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button