மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்!

மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு விஷயம். மாதவிடாய் என்பது கருப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக இரத்த போக்கு ஏற்படுவது தான். பொதுவாக, பெண்ணாக பிறந்த ஒவ்வொரும் இதை சந்தித்து தான் ஆக வேண்டும். சரியாக 11 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பூப்பெய்தி விடுவர் அல்லது பெண்ணின் மார்பக வளர்ச்சி தொடங்கிய 2 வருடத்திற்குள் பூப்பெய்தி விடுவர்.

11 அல்லது 15 வயதில் தொடங்கும் இந்த மாதவிடாயானது, 45 முதல் 55 வயதிற்குள் பொதுவாக நின்றுவிடும். கர்ப்ப காலம் மற்றும் பாலூட்டும் காலங்களில் மட்டும் மாதவிடாய் ஏற்படாது. பருவமடைந்த பெண்களுக்கு 21-35 நாட்கள், சரியாக கூற வேண்டுமென்றால், 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் நிகழும். 4 முதல் 5 நாட்களுக்கு இரத்த போக்கு இருக்கும். வெளியேறும் இரத்தத்தின் அளவு 20 முதல் 80 மி.லி. வரை இருக்கும்.2 pads

கருப்பையில் இருந்து வெளியேற்றப்படும் ஹார்மோனோசோஸ்டிரஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகியவற்றால் மாதவிடாயானது கட்டுப்படுத்தப்படுகிறது. பெண்களை பொறுத்தவரை, 8 வயது முதல் 18 வயது வரையிலான காலக்கட்டத்தில் தான், உடலின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் நிகழும். இது உடலை பாலியல் இனப்பெருக்கம் செய்யக்கூடியதற்கு ஏற்றதாக மாற்றுகிறது. இது தான் பருவமடைதல் என்று அழைக்கப்படுகிறது. மாதவிடாய் என்பது சாதாரண ஆரோக்கியமான பெண்ணாக வளருவதை வெளிகாட்டுவதற்கு நம் உடல் உணர்த்தும் ஒரு செயலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஆரம்ப காலத்தில் மாதவிடாய் வழக்கமானதாக இருக்குமா?

ஒரு பெண் பூப்பெய்திய காலத்தில் இருந்து 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மாதவிடாய் என்பது தொடர்ச்சியாக இல்லாமல் இருக்கலாம். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு பிறகு தான் 4 முதல் 6 வார இடைவெளிக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்பட தொடங்கும்.

மாதவிடாய் காலங்களில் எவற்றை பயன்படுத்துவது?

நம் முன்னோர்கள் மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால், இந்த நவீன காலக்கட்டத்தில் அதற்கு பல்வேறு வகையான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. நாப்கின், டேம்பான், மென்ஸ்ட்ரல் கப் என பல வகை உள்ளன. இவற்றில் எது உங்களுக்கு உகந்தது எது என்பதை பயன்படுத்தி தான் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால், பெரும்பாலான பெண்கள் காட்டனால் செய்யப்பட்ட நாப்கின்களை தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். பல்வேறு விதமான அளவுகளிலும், வடிவங்களிலும் அவை கிடைப்பதே இதற்கு காரணம். உள்ளாடைகளில் ஒட்டிக்கொள்ளும் வகைகளில் இவை வடிவமைக்கப்படுகின்றன.

விளையாட்டு வீராங்கணைகள், நீச்சல் வீரர்கள் பெரும்பாலும் டேம்பான் பயன்படுத்துவதையே விரும்புகின்றனர். ஏனென்றால், டேம்பான்கள் காட்டனால் செய்யப்பட்ட அடைப்பான் போன்றது. இது பெண்ணுறுப்புக்குள் வைத்து கொள்ள கூடியது. இது வெளியேறும் இரத்தத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும். ஆனால், 8 மணிநேரத்திற்கு ஒரு முறை அதனை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால், தீவிர நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும் சிலர் மென்ஸ்ட்ரல் கப்புகளைப் பயன்படுத்துகின்றனர். சிலிகானால் செய்யப்பட்ட இந்த சிறிய கப்களை, பெண்ணுறுப்புக்குள் பொருத்தினால், வெளியாகும் இரத்தம் கப்பில் சேகரிக்கப்படும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அதனை சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பெண் கண்டிப்பாக மாதவிடாய் காலத்தில், நாளொன்றிற்கு 3 முதல் 5 நாப்கின்களை மாற்ற வேண்டும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=” Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள் (PMS)

ப்ரீ மென்ஸ்ட்ரல் சின்ரோம் என்பது மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ பெண்களுக்கு மனதளவிலோ அல்லது உடலளவிலோ தோன்றக்கூடிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் என்பது, மனசோர்வு, சோகம், பதற்றம், எரிச்சல், அமைதியின்மை, அதிகமான பசி, தலைவலி, முகப்பரு போன்றவையாக இருக்கலாம்.

இத்தகைய அறிகுறிகள் மாதவிடாய் காலத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் மற்றும் மாதவிடாய் காலத்தின் முதல் சில நாட்களுக்குப் பிறகு அவை குறைந்திடும். அந்த அறிகுறிகள் எந்தவொரு உள்ளுறுப்பின் காயங்களாலோ ஏற்பட கூடியவையோ அல்லது தொடர்புடையவையோ அல்ல. மாதவிடாய் சுழற்சியினால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் விளைவே இவை. மேலும் இவை பெண்களின் வாழ்க்கை முறையில் பெரும் தொந்தரவாகவே ஒவ்வொரு முறையும் அமையக்கூடும். யோகா, மன அழுத்த மேலாண்மை, தியானம் மற்றும் உணவு கையாளுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அவற்றில் இருந்து விடுபட உதவக்கூடும். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின் 2 வது பாதியில் காப்ஃபைன், உப்பு, ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பதே சிறந்தது.

மாதவிடாய் தசைப்பிடிப்பு

ஏராளமான பெண்கள் மாதவிடாய் காலங்களில் கடும் வயிற்று வலியை உணரக்கூடும். இது முதல் 2 நாட்களிலேயே அதிகமாக இருக்கும். இதற்கு சூடு நீர் ஒத்தடம் அல்லது இப்யூபுரூஃபன், மெஃபெனாமிக் அமிலம் சிறந்த நிவாரணமாக அமையக்கூடும்.

மாதவிடாய் ஏற்பட்ட பிறகு கவனிக்க வேண்டிய விஷயங்கள்?

மாதவிடாய் காலண்டரை பராமரிக்கவும். உங்களது வழக்கமான மாதவிடாய் சுழற்சியை தெரிந்து கொள்ள இது மிகவும் உதவும். ஒவ்வொரு மாதமும், மாதவிடாய் தொடங்கிய நாள், முடிந்த நாள், இரத்த போக்கின் அளவு, உபயோகித்த நாப்கின்கள் அளவு, கணிசமான இரத்தபோக்கு இருந்ததா, இடைக்கால இரத்த போக்கு எதுவும் இருந்ததா போன்றவற்றை அதில் குறித்து வைத்து கொள்ளவும்.

மருத்துவரை அணுக வேண்டிய பிரச்சனைகள் எவை?

* 15 வயதை தாண்டியும் பூப்படைய தவறினால்

* பூப்படைந்து 2 ஆண்டுகள் கடந்த பின்னரும் ஒழுங்கற்ற மாதவிடாய்

* நிகழ தவறிய மாதவிடாய் (பாதுகாப்பற்ற உடலுறவு நடந்திருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்)

* தீவிர வயிற்று வலி அல்லது PMS

* அதிகப்படியான இரத்தப்போக்கு

* 7 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் மாதவிடாய்

ஒழுங்கற்ற மாதவிடாய்க்கான காரணங்கள்

பி.சி.ஓ.எஸ், உணவு கோளாறுகள், அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு, தைராய்டு கோளாறுகள் மற்றும் பிற ஹார்மோன் ஏற்றத்தாழ்வு. பிஐடி, ஃபைப்ராய்டுகள், பாலிப், எண்டோமெட்ரியோசிஸ் போன்ற பிற சிக்கல்களும் ஒழுங்கற்ற மாதவிடாயை ஏற்படுத்தக்கூடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button