தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தலைமுடி அதிகமா உடையுதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

முடி உதிர்தல் என்பது எல்லோரையும் கவலைக்கிடமாக ஆக்கும் செய்தி ஆகும். ஒவ்வொரு தடவையும் தலை சீவும் போது நிறைய முடிகள் கொட்டினால் என்ன செய்வது? இப்படி கூந்தல் உடைய என்ன காரணம்? இப்படியெல்லாம் நாம் என்றைக்காவது ஆராய்ந்து பார்த்தது உண்டா? கண்டிப்பாக கிடையாது.

கூந்தல் உதிர்வு இருந்தாலே கண்ணைக் மூடிக் கொண்டு தலைக்கு போடும் ஷாம்பை மட்டும் மாற்றிக் கொண்டே இருப்போம். இப்படி ஷாம்பை மட்டும் மாற்றினால் போதுமா? கூந்தல் உதிர்வு பிரச்சனை நின்று விடுமா? கண்டிப்பாக கிடையாது.

முதலில் கூந்தல் உதிர்வு எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். கூந்தல் உதிர்வை இயற்கையாகவே சரிசெய்ய சில பொருட்கள் உள்ளன. அதை பயன்படுத்தியே நாம் பலன் பெற முடியும். சரி வாங்க அவை எவை எனப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கூந்தல் உடைய காரணங்கள்

கூந்தலை சரியாக பராமரிக்கத் தவறுவது தான் கூந்தல் உதிர்விற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். சரியான நேரத்தில் உங்கள் கவனிப்பை தொடங்காவிட்டால் கூந்தல் உதிர்வு அதிகமாக இருக்கும். அதே போல் கீழ்க்கண்ட காரணிகளும் காரணமாகின்றன.5 hair masks 155

* சமநிலையற்ற உணவுப்பழக்கம்

* அதிகப்படியான மன அழுத்தம்

* கூந்தல் வறண்டு போதல்

* அதிகப்படியான சூடு

* ஒரு நாளைக்கு பலமுறை தலைக்கு ஊற்றுதல்

* எலாஸ்டிக் ஹேர் டை பயன்படுத்துவதால் முடி இழுபட்டு உடைதல்

* அழுத்தி சீவுதல்

* முடியின் நுனியை வெட்டாமல் இருப்பது

* போதிய ஊட்டச்சத்தின்மை

* ஹைப்போ தைராய்டிசம்

கூந்தல் உதிர்வை தடுக்கும் வழிமுறைகள்

கூந்தல் உதிர்வு என்பது கூந்தலில் உள்ள புரோட்டீன் உடைவதால் ஏற்படுகிறது. மயிர்க்கால்கள் பலவீனமாகி உதிர ஆரம்பித்து விடும். அதே மாதிரி கூந்தல் வறண்டு போனால் கூட உடைய ஆரம்பிக்கும். எனவே கூந்தல் உதிர்வை தடுத்து எப்படி இயற்கையாகவே அழகான கூந்தலை பெறலாம். வாங்க தெரிஞ்சுக்கலாம்

அதிகமான வைட்டமின்களை எடுத்துக் கொள்ளுங்கள்

கூந்தல் வளர்ச்சிக்கு வைட்டமின்களின் போஷாக்கு அவசியமானது. வைட்டமின் சி, டி3 மற்றும் பயோடின் போன்றவைகள் கூந்தல் வளர்வதற்கு, மயிர்க்கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தையும் தருகிறது. இதற்கு நீங்கள் சிட்ரஸ் பழங்கள், சீஸ், முட்டை, கீரைகள் போன்ற உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் வளர்ச்சிக்கு துணை புரிகிறது. ஏனெனில் க்ரீன் டீயில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே க்ரீன் டீயை பயன்படுத்தி வந்தால் முடியை மெலிதாக்கும் தொற்றுகளை விரட்ட முடியும். 1 டேபிள் ஸ்பூன் பவுடர் க்ரீன் டீ பொடியை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து வர வேண்டும். இந்த பேஸ்ட்டை 10 நிமிடங்கள் தேய்த்து பின்னர் குளிர்ந்த நீரில் அலசி விடுங்கள்.

முட்டை ஹேர் மாஸ்க்

முட்டையில் புரோட்டீன், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இது கூந்தலை பாதுகாத்து அழற்சி மற்றும் பாதிப்பிலிருந்து காக்கிறது.

கற்றாழை

கற்றாழையில் இல்லாத அதிசயங்களே இல்லை. கற்றாழை கூந்தலுக்கும் சருமம் இரண்டுக்குமே பயன்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கூந்தலின் pH அளவை சமமாக வைத்து கூந்தல் உதிர்வை தடுக்கிறது.1 hairbreakage 15

ஆப்பிள் சீடர் வினிகர்

கூந்தலின் pH அளவு மாறும் போது மயிர்க்கால்கள் பலவீனமடைந்து கூந்தல் உதிர்கின்றன. ஆனால் ஆப்பிள் சீடர் வினிகர் இந்த அமில கார நிலையை சரிசமமாக வைத்து கூந்தல் உதிர்வை தடுக்கிறது. இதிலுள்ள பூஞ்சை எதிர்ப்பு தன்மை மற்றும் ஆன்டி மைக்ரோபியல் தன்மை தலையில் ஏற்படும் தொற்றை தடுக்கிறது.

வெங்காய ஜூஸ்

வெங்காயத்தில் கூந்தலை பலப்படுத்தும் கரோட்டீன் உள்ளது. இந்த போஷாக்கு இருந்தால் போதும் கூந்தல் வலிமையாக இருக்கும். மேலும் இதிலுள்ள சல்பர் கூந்தல் உதிர்வை தடுத்து நிறுத்துகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=” Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

டிப்ஸ்கள்

* ஒவ்வொரு நாளும் கூந்தலை காய வைக்க ஹீட்டர், அயனிங் மெஷினை பயன்படுத்தாதீர்கள்.

* தொடர்ச்சியாக கூந்தலை வெட்டுங்கள்

* கூந்தலுக்கு கலரிங் வேண்டாம்

* எண்ணெய்யை கொண்டு வாரத்திற்கு மூன்று முறை மசாஜ் செய்து வாருங்கள்.

* தினமும் கூந்தலை அலசினால் முடிகள் உடைய வாய்ப்புள்ளது.

* பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், கீரைகள், மீன்கள் அடங்கிய சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button