ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகள் என்ன?

பால் கலப்படம் ஆனதா என்பதனை அறியும் வழிமுறைகளை தெரிந்துக்கொள்ளுங்கள். பாலில் மாவு பொருட்கள் கலந்திருந்தால், இதனைக் கண்டறிய சிறிது பாலில் ஒரு சில சொட்டு டிஞ்சர் சேர்த்தால் உடனடியாக பால் நீல நிறத்தில் மாறும். அப்படியானால் அது மாவு பொருள் கலப்படம் செய்யப்பட்ட பால் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். வழுவழுப்பான தரையில் சுத்தமான பாலை ஒரு சில துளிகள் விட்டால் அது அப்படியே தரையில் இருக்கும். ஆனால் மாவு கலந்த பாலை விட்டால் அது மாவின் கனத்தினால் தரையில் ஓடும். பாலில் சோப்புத் தூள் கலந்திருந்தால், அதை கண்டறிய ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் பாலை ஊற்றி நன்கு குலுக்கினால் நுரை வரும். வெறும் பாலாக இருந்தால் சிறிது நேரத்தில் அந்த நுரை தானாகவே போய் விடும்.

ஆனால், சோப்புத் தூள் கலந்த பாலாக இருப்பின் அந்த நுரை போகாது. சுத்தமான பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து அதில் எலுமிச்சை சாறு கலந்தால், அந்த பால் உடனே திரிந்து விடும். ஆனால், கலப்பட பால் திரியாது. பாலில் ரசாயனப் பொருட்கள் கலந்திருந்தால் அதனை பிஎச் காகிதம் கொண்டு கண்டு பிடித்து விடலாம். ஒரு சிறிய டம்ளரில் பாலை எடுத்து அதில் பிஎச் காகிதத்தைப் போட்டால் காகிதம் பச்சை நிறமாக மாறினால் அது நல்ல பால். அதுவே, மஞ்சள் அல்லது ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது ரசாயனம் கலந்த பால் என்பதை உறுதி செய்யலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் சாப்பிட்டா ஒரே மாசத்துல ஹைட்டாகலாம்!!

nathan

மறந்துபோன மகத்தான மருத்துவ உணவுகள்!

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்

nathan

Leave a Comment

%d bloggers like this: