ஆரோக்கிய உணவு

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி

கொலஸ்ட்ராலுக்கு டாட்டா காட்டும் பார்லி
மனிதனுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று. இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு வாற்கோதுமை என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது.மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது. பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. 100 கிராம் பார்லியில் 270 கலோரி, 54.4 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.பார்லியை வெறும் வானொலியில் வறுத்து அதிலேயே நீர் ஊற்றி கொதிக்கவிடவும். பின் உப்பு சேர்த்து கொஞ்சம் கஞ்சி போல கொதித்து வரும் வரை சமைத்து பின் வடிகட்டி பருகவும். கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக தருவார்கள். கொலஸ்ட்ராலை அழிப்பதற்கு இந்த கஞ்சி ஒரு சிறந்த மருந்து. இதை அடிக்கடி சாப்பிடுவது மூலம் நரம்புகள் வலுப்படும்.

குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி. நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும். உடல் வறட்சியை போக்க வல்லது. நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சலை தடுக்கும்.

வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும். குடல் புண்ணை ஆற்றும். இருமலைத் தணிக்கும். எலும்புகளுக்கு உறுதி தரும். பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சுங்கள். தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன் அந்தக் கஞ்சியுடன் சிறிது எலுமிச்சம் பழச்சாறும், சர்க்கரையும் சேர்த்துச் சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியை குணமாக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலைப்(எல்.டி.எல்) போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் பி, நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக்கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button