அழகு குறிப்புகள்

கழுத்தில் தெரியும் உங்கள் வயது

 

கழுத்தில் தெரியும் உங்கள் வயது பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு மட்டும் கொடுப்பதில்லை. சில பெண்களுக்கு முகம் 20 வயது போல் தோற்றமளித்தால், கழுத்து 35 வயது போல் காட்சியளிக்கும். நிறைய ஆபரணங்களைப் போட்டு கழுத்து கருத்து போயிருக்கும்.

இல்லாவிட்டால் வியர்வையால் சுருங்கி காட்சியளிக்கும். முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடக்கூடாது. கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும்.

இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது. கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்-அப் செய்துகொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து காணப்படும்.

உங்கள் கழுத்து பளிச்சிட இதோ டிப்ஸ்:

கழுத்துக்கென்றே வகைவகையான ஸ்பெஷல் பிளீச் இருக்கிறது. சிலரின் கழுத்து வறண்டு போயிருக்கும். சிலருக்கு ஜீவனே இல்லாமல் இருக்கும். அவர்கள் முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும். பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வெயில் தொடர்ந்து கழுத்தில் விழுந்தால் கழுத்துப்பகுதி கறுத்துவிடும். தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கருக்கவைத்துவிடும். இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

கழுத்தில் சுருக்கம் ஏற்பட்டு வயதானவர் போல் காட்சியளிப்பவர்கள் குளிப்பதற்கு முன்னால், எலுமிச்சை சாறில் கஸ்தூரி மஞ்சளை அரைத்துக் குழைத்துக் கழுத்தில் நன்றாக பூசி, பத்து நிமிடம் ஊற விட வேண்டும். பின்பு மிதமான சுடுநீரில் கழுத்தைக்கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்துச் சுருக்கம் காணாமல் போகும்.

கழுத்து மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் பளபளப்பாக தோன்றும். சில பெண்களுக்கு கழுத்தில் வரிவரியாக காணப்படும். இவர்கள், முட்டையின் வெள்ளைக் கருவுடன், இரண்டு சொட்டு கிளிசரின், ஒரு சொட்டு பன்னீர் சேர்த்து கழுத்தில் பூச வேண்டும். இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால் கழுத்திலுள்ள வரிகள் மறைந்து, சங்கு கழுத்து போல் காட்சிதரும். சிலர் நல்ல நிறமாக இருப்பார்கள். அவர்கள் கழுத்து மட்டும் நிறம் கம்மியாகி கருத்துப்போயிருக்கும். அதே போல் கவரிங் செயின் போடும் பெண்களுக்கும் கழுத்து கருப்பாகிவிடும். இவர்கள் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து தொடர்ந்து கழுத்தில் தேய்த்து வரவேண்டும்.

முடிச்சுகள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து விடும். இதனால் கருத்து போன கழுத்து பளிச்சென்று மாறிவிடும். முகத்துக்கு ஏற்ற அழகை கழுத்தும் பெற்றிருந்தால் மட்டுமே பெண்கள் முழு அழகுடன் திகழ முடியும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வெறும் 40 நாள் செவ்வாழையுடன், தேன் கலந்து சாப்பிடுங்க!

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan

முழங்கையில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில அற்புத வழிகள்!…

sangika

முகத் தோற்றத்தைக் கெடுக்கும் கருவலையத்தை வீட்டுக் குறிப்புகளைக் கொண்டு நீக்கிவிட!…

sangika

தமிழகத்தில் காதலனுடன் மனைவியை கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி!

nathan

எந்தச் சமயங்களில் உறவுகொண்டால் கருத்தரிக்கும்?

sangika

முடக்கிப்போடும் மூட்டுவலி… காரணமும்.. தீர்வும்..தெரிஞ்சிக்கங்க…

nathan

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

sangika