அறுசுவைஇனிப்பு வகைகள்

சுவையான ரவா கேசரி

தேவையான பொருட்கள் :

ரவை _ 200 கிராம்

சர்க்கரை _ 200 கிராம்

நெய் _ 150 கிராம்

கேசரி பவுடர் _ தேவையான அளவு

ஏலக்காய் _ 4

முந்திரிப் பருப்பு _ 10
uyio
செய்முறை :

முதலில் ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு , ரவையை சிவக்க வறுக்கவும். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து வைக்கவும். ரவையின் தரத்துக்கு தகுந்தபடி தண்ணீர் விட்டு கிளறவும். ரவை நன்குவெந்தவுடன்சர்க்கரைபோடவும்.

சர்க்கரை நன்கு இளகி கெட்டிப்பட துவங்கும். கேசரி அடிபிடிக்காமல் இருக்க விடாமல் கிளற வேண்டும். கேசரி நன்கு சேர்ந்து வந்ததும் , மீதமுள்ள நெய் விட்டு , கேசரி பவுடர் போட்டு கிளறி இறக்கவும்.பின்னர் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி ஆகிவற்றை சேர்க்கவும்.

சுவையான ரவா கேசரி தயார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button