ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு பாதிப்பை குறைக்க உதவும் உணவு முறைகள் என்ன….?

உடலில் சர்க்கரையின் அளவு சரியாக பேணப்படாமல் இருப்பதும், இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு இயல்புக்கு அதிகமாக இருப்பதும் வகை 2 நீரிழிவாகும். ஆரோக்கியமான உணவு பழக்கத்தின் வாயிலாஅகவே பெரும்பாலும் இப்பாதிப்பு வருகிறது.
உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு குறைவு, உடல் எடை அதிகமாதல், உடல் பருமன் ஆகியவையும் நீரிழிவு பாதிப்புக்கு காரணமாகலாம்.
இன்சுலினை உடல் தடுப்பதால் கணையம் அதிக அளவு இன்சுலினை சுரக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. உடலின் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் இக்குறைபாடு இருப்பவர்கள் சோம்பல் உள்ளவர்களாய், வலுவற்ற தசை கொண்டவர்களாய், குனிந்து வளைந்து வேலை செய்யும் திறன் அற்றவர்களாய் இருப்பார்கள்.

நீரிழிவு பாதிப்புள்ளோர் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி பட்டியலை கைக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு பொருள்களை சாப்பிட தவறுவதே இக்குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.
தினை, கொண்டை கடலை, பட்டர் பீன்ஸ், தானியங்கள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற கொட்டை வகைகள் ஆகியவற்றை தாராளமாக சாப்பிடலாம். தினை வகைகள், பார்லி, தீட்டப்படாத முழு கோதுமை, சிவப்பரிசி ஆகியவற்றையும் சாப்பிடலாம்.
வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், பிரெக்கோலி, பாகற்காய், வெந்தயம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவு பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். பழச்சாறு மட்டும் அருந்தி சாப்பிடாமல் இருத்தல், ஒருவேளை உணவை தவிர்த்தல் போன்றவை உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் அகலவும், தங்கியிருக்கும் கொழுப்பு கரையவும் உதவும்.
உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவு நீரிழிவு குறைபாட்டுக்கு முக்கிய காரணம். நீந்துதல், ஜாகிங் என்னும் சீரான ஓட்டம், சைக்கிள் (மிதிவண்டி) ஓட்டுதல், நடைபயிற்சி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். மாடிப்படி ஏறுதல் மற்றும் யோகாசனம் செய்தல் ஆகியவையும் நீரிழிவு பாதிப்பை குறைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button