அழகு குறிப்புகள்

கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை

 

கேரள அழகு ஆயுர்வேத சிகிச்சை முறை

செயற்கையான அழகு சாதனங்களை கைவிட்டு விட்டு கேரள முறை ஆயுர்வேத இயற்கை வைத்தியத்தை இன்று பலரும் நாடி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் கூட இப்படியான சிகிச்சை முறைகளை ரகசியமாக எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் இப்படியான அழகு சாதன நிலையங்கள் அதிகரித்து வருகின்றன.

உடல் வனப்பாகவும் முகம் அழகாகவும் இருக்க சில ஆயுர்வேத இயற்கை மருத்துவ முறைகள் பற்றி பார்ப்போம்.

தாரா

ஒரு குறிப்பிட்ட மூலிகை எண்ணெய், மருந்து கலந்த பாலை தினமும் 45 நிமிடங்கள் முன் நெற்றியில் விசேஷமான முறையில் ஊற்றி சிகிச்சை அளிக்கும் முறையே இது.

உடல், மனம் சமநிலை பெறுவதில் இந்த சிகிச்சை மிகவும் உதவுகிறது. உடல் பலமும், நினைவு திறனும் அதிகரிக்கிறது. அத்துடன் குரல் வளம் தெளிவாகிறது.

கண் நோய்கள் தீருதல், தலைவலியில் இருந்து விடுதலை, ஆரோக்கியமான நல்ல தூக்கம், மென்மையான அழகான சருமம் பெறுதல் போன்ற பல்வேறு நன்மைகளும் இந்த சிகிச்சையால் நமக்கு கிடைக்கின்றன.

நவரக்கிழி

பல்வேறு மருந்து கலவை கொண்ட துணிப்பை மூலம் உடலில் ஒற்றடம் கொடுத்து சிகிச்சை அளிக்கும் முறையே இது. இதன்மூலம் முழு உடலும் அல்லது உடலின் குறிப்பிட்ட பகுதிகள் வியர்க்க வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக உடலின் இறக்கம் குறைந்து மூட்டுகளின் விறைப்புத்தன்மை நீங்குகிறது. ரத்த ஓட்டமும் மேம்படுகிறது. தேகம் பொலிவு பெறுகிறது. அதிக தூக்கத்தால் உண்டாகும் அசதியும் விலகுவதோடு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகின்றன.

நஸ்யம்

இது ஒரு வித்தியாசமான சிகிச்சை முறை. மூலிகைச்சாறையும், மருந்துகள் கலந்த எண்ணெயையும் மூக்கின் வழியே விடுகிறார்கள். இதனால் ரத்த ஓட்டம் மேம்பட்டு உடல் உறுப்புகளுக்கு புது தெம்பு கிடைக்கிறது. அத்துடன், பல்வேறு நரம்புகளின் நுனிகள் தூண்டப்பட்டு மைய நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கிறது.

உத்வர்த்தனம்

இது மசாஜ் முறையிலான சிகிச்சை. மருந்து கலந்த பவுடரை உடலில் தூவி மசாஜ் செய்வார்கள். இதனால் தோற்றம் பொலிவு பெறுவதோடு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகிறது. அதன்மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், நல்ல தூக்கம் கிடைத்து உடலும் புத்துணர்வு பெறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button