மருத்துவ குறிப்பு

உங்க குழந்தை எப்போ பார்த்தாலும் மூக்குல கைவிடுறானா? கட்டாயம் இதை படியுங்கள்!

குழந்தைகள் செய்யும் சில கெட்ட பழக்கங்கள் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாகவும், பார்க்கும் நமக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அத்துடன் இந்த கெட்ட பழக்கங்கள் பிற்காலத்தில் குழந்தைகள் வேறு சில கெட்ட பழக்கங்களைப் பழகிக் கொள்ளுவதற்கு வழிவகுக்கும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைகளின் சிறு வயதிலேயே அவர்களின் கெட்ட பழக்கங்களைச் சரி செய்து விடுங்கள்.

குழந்தைகள் நகம் கடித்தல், மூக்கினுள் கை விடுதல், நாக்கை கடித்தல் மேலும் சில குழந்தைகள் எச்சில் துப்புதல் போன்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டுள்ளார்கள். இந்த விஷயங்களைக் குழந்தைகள் மற்றவர்கள் முன்பு செய்யும் போது நம்மை மிகவும் சங்கடத்திற்கு ஆளாக்குகிறது. இந்த மாதிரியான பழக்கத்தை நீங்கள் சிறுவயதிலேயே நிறுத்த வேண்டும். ஆனால் இதனை நீங்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாத காரியம் தான் இதற்கு உங்களுக்குச் சற்று பொறுமை தேவை. சரி எவ்வாறு நிறுத்துவது என்று பார்ப்போம்.

புறக்கணித்தல்

குழந்தைகள் செய்யும் கெட்ட பழக்கத்தைப் பார்த்து விட்டு அவர்களுக்குத் தண்டனை கொடுக்காதீர்கள் இது குழந்தைகளுக்குச் உங்களின் மேல் மேலும் வெறுப்பினை ஏற்படுத்தும். அத்துடன் அவர்கள் மூக்கினுள் கை விடுதல், நகம் கடித்தல் போன்ற விஷயங்களைச் செய்யும் போது குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் சென்று விடுங்கள். குழந்தைகள் அந்த விஷயங்களைச் செய்யும் போது நீங்கள் பார்த்தால் மேலும் அந்த விஷயத்தைச் செய்யத் தூண்டும்.

பரிசு கொடுத்தல்

முதலில் குழந்தைகள் நல்ல விஷயங்களைச் செய்யும் போது பாராட்டுங்கள் அல்லது ஒரு சிறிய பரிசை கொடுங்கள். இது தான் அவர்களின் தப்பை நிறுத்துவதற்கான மிகச் சரியான தந்திரம். நல்ல விஷயங்களைச் செய்யும் போது பாராட்டி பரிசு கொடுங்கள் கெட்ட விஷயத்தின் போது இல்லை இது தவறான விஷயம் இதற்கு உனக்குப் பரிசு இல்லை என்று குழந்தைகளுக்குச் சொல்லி உணர்த்துங்கள்.

கற்றுக்கொடுங்கள்

குழந்தைகளிடம் முதலில் நீங்கள் தவறான விஷயத்தைப் பற்றிச் சொல்லுங்கள். அந்த விஷயத்தின் பின்னால் இருக்கும் ஆரோக்கியமற்ற கேடுகள் பற்றிக் கூறுங்கள். விஷயங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொண்டால் அதன் மீது இருக்கும் ஆர்வம் குழந்தைகளுக்குக் குறைந்து விடும். அந்த பழக்கத்தை அடுத்த முறை செய்யும் போது யோசித்துக் கைவிடுவார்கள்.

ஒன்று ஒன்றாக

குழந்தைகள் நிறைய ஆரோக்கியமற்ற கெட்ட பழக்கங்களைக் கொண்டிருந்தால் அனைத்தையும் ஒன்றாகத் திருத்த முடியாது. எனவே நீங்கள் அவற்றை ஒன்று ஒன்றாகத் திருத்த முயற்சி செய்யுங்கள். இதற்கு முதலில் பெற்றோர்களாகிய நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். குழந்தைகளுக்கு இருக்கும் கெட்ட பழக்கத்தில் எது மிக மோசமானதோ அதை முதலில் திருத்த முயற்சி செய்யுங்கள். இதில் முக்கியமானது குழந்தைகளை வெளியில் வைத்துத் திட்டுவதை முதலில் தவிருங்கள். குழந்தைகள் என்ன தவறு செய்தலும் வீட்டினுள் வைத்துத் திருத்துங்கள்.

காரணங்கள்

குழந்தைகள் இந்த விஷயத்தை எதனால் செய்கிறார்கள் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். குழந்தைகள் பொதுவாக இந்த மாதிரியான பழக்கங்களை கோவமாக இருக்கும்போதும் மன அழுத்தம் ஏற்படும் போதும் தான் செய்கிறார்களாம். எனவே குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு இருங்கள் அவர்கள் எப்போது இந்த விஷயத்தைச் செய்கிறார்கள் எதனால் செய்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள். குழந்தைகளிடம் பேசுங்கள் அவர்களின் பிரச்சனைகளைக் கேளுங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் அணைப்பையும் கொடுங்கள். குழந்தைகளின் பிரச்சனைகளைக் கேட்ட பின்பு அதற்கான தீர்வை கொடுத்து எப்போதும் உங்கள் செல்ல குழந்தையை மகிழ்ச்சியா வச்சுக்கோங்க.

விதிமுறைகள்

கெட்ட பழக்கங்களைச் செய்யும் போது அவர்களுக்கான விதிமுறைகளைச் செயல்படுத்துங்கள். இந்த பழக்கத்தை அடுத்த முறை செய்தல் இதற்கான தண்டனை நீ செய்ய வேண்டும் என்று சின்ன தண்டனையைக் கொடுங்கள். நீங்கள் தோப்புக்கரணம் போன்ற தண்டனைகளைக் கொடுக்கலாம். இது உண்மையில் ஆரோக்கியமான தண்டனை தான். இது போன்ற சில ஆரோக்கியமான தண்டனைகளை அவர்களுக்கு விதி முறைகளாகக் கொடுங்கள்.3 15683662

மன உறுதி

குழந்தைகளைத் தனிமையில் இருக்க அனுமதிக்காதீர்கள். குழந்தைகளின் மன உறுதியை அதிகரித்து எப்போதும் உங்கள் அன்பைக் கொடுங்கள். அவர்கள் செய்யும் தவறுக்கு கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையுடனும் அமைதியாகவும் சொல்லிப் புரிய வையுங்கள். இந்த அணைத்துக் குறிப்புகளையும் முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் விரைவிலேயே எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டு வெளியில் வந்து விடுவார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button