ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… பெண்களின் கருப்பையில் ஒளிந்திருக்கும் அதிசயங்கள் மற்றும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?

பெண்களின் கருப்பைதான் எதிர்கால சந்ததியின் வாழ்க்கைக்கு தொடக்கப்புள்ளியாக இருக்கிறது. ஆனால் பெண்களின் பிறப்புறுப்பு அளவிற்கு அவர்களின் கருப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் அவையின்றி எந்தவொரு உயிரையும் நம்மால் உருவாக்க முடியாது, அதேசமயம் பெண்களுக்கு வயதாகும் போது அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் பல விஷயங்கள் கருப்பையில் உள்ளது.

பெண்கள் கருவுருவதில் இருந்து அவர்களின் ஹார்மோன்களை சமநிலையில் வைக்கும் வரை பல வேலைகளையும் செய்வது பெண்ணின் கருப்பைதான். அதேசமயம் பெண்களுக்கு எளிதில் குணப்படுத்த முடியாத பல நோய்கள் வருமிடமும் கருப்பைதான். இந்த பதிவில் பெண்களின் கருப்பை பற்றி தெரியாத பல ஆச்சரியமான தகவல்களை பார்க்கலாம்.

மாத்திரைகள் கருப்பைக்கு பயனுள்ளதாக இருக்கலாம்

வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் எண்டோமெட்ரியோஸ் பிரச்சினை மற்றும் கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களை பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் கருப்பை புற்றுநோய் என்பது பெண்களுக்கு ஏற்படும் நோய்களின் உச்சம் என்று கூறலாம். அதனை ஆரம்பத்திலேயே தடுப்பதுதான் நல்லது .

கருப்பையில் எத்தனை முட்டைகள் இருக்கும்

கருப்பையில் அதிகபட்சம் எத்தனை முட்டைகள் இருக்கும் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். பெண்கள் கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் அவர்கள் கருப்பையில் கிட்டதட்ட 3 முதல் 5 மில்லியன் முட்டைகள் இருக்குமாம். அடுத்த நான்கு மாத காலத்திற்கு பெண்களின் கருப்பை எந்த முட்டைகளையும் உற்பத்தி செய்யாது. பெண்கள் பிறக்கும் போதே அவர்கள் கருப்பையில் 7 இலட்சம் முதல் 1 மில்லியன் வரையிலான முட்டைகள் இருக்கும். அவர்கள் தங்களின் முதல் மாதவிடாயை அடையும்போது இந்த எண்ணிக்கை பெருமளவில் குறையுமாம்.

முட்டைகள் ஒன்றுக்கொன்று போட்டியிடும்

கருவுறும் நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை வளர தொடங்கி ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் ஹார்மோன்ரீதியாக போட்டியிட தொடங்கும். இதில் ஆதிக்கம் செலுத்தும் முட்டையே வெளிப்பட்டு கருவாக வளர தொடங்கும். இத்தனை நிகழ்வுகளும் பெண்ணின் கருப்பைக்குள் நடக்கிறது.

கருப்பை நீர்கட்டிகள் தானாகவே சரியாகிவிடும்

பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கருப்பை நீர்கட்டிகள் ஆகும். பெண்களுக்கு இதற்கு சரியான சிகிச்சைகள் தேவை. ஆனால் இவற்றில் பெரும்பாலான கட்டிகள் 3 அல்லது 4 மாதங்களுக்குள் தானாகவே வெளியேறிவிடும். இருந்தாலும் இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியமாகும்.

சில கட்டிகளுக்கு சிகிச்சை தேவை

10 சதவீதத்திற்கும் குறைவான கட்டிகள் டெர்மைடு மற்றும் எண்டோமேட்ரியோம்ஸ் போன்றவை தானாக வெளியேறாது. இதில் மகிழ்ச்சியான ஒரே செய்தி இவை புற்றுநோய் கட்டியாக மாறாது, இருப்பினும் அவற்றை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டியது அவசியமாகும். இந்த கட்டிகள் பெண்களுக்கு எண்டோமெட்ரியோஸிஸ் குறைபாட்டை உண்டாக்கும்.

கருப்பை புற்றுநோய் மிகவும் மோசமான நோயாகும்

கருப்பை புற்றுநோய் பெரும்பாலும் பெண்களுக்கு 50 வயதிற்கு மேல் ஏற்படுவதாகும், ஆனால் இப்பொழுது இளம்பெண்களுக்கு கூட இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. புற்றுநோயை முதல் நிலையிலேயே கண்டறிபவர்களுக்கு 90 சதவீதம் வாழ வாய்ப்புள்ளது, ஆனால் 20 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே இப்படி முன்கூட்டியே கண்டறிகின்றனர். எனவே முடிந்தவரை விரைவில் கண்டுபிடிப்பது நோயை குணப்படுத்துவதை எளிதாக்கும்.

முடிந்தவரை அறுவைசிகிச்சையை தவிர்க்கவும்

முட்டைகளை மாற்றுவது என்பது கடினமான ஒன்று. குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இருக்கும் பெண்கள் முடிந்தவரை கருப்பை சிகிச்சையை தவிர்ப்பது நல்லது. இதனால் அவர்களின் கருவுரும் வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது. கருப்பை தொடர்பான அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் பெண்கள் இனப்பெருக்க அறுவைசிகிச்சையில் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களிடம் அறுவைசிகிச்சை செய்துகொள்ளவும்.

கருப்பையின் அளவு

பெண்களின் கருப்பையின் அளவு அவர்கள் நினைப்பதை விட மிகவும் சிரியதாகும். தங்களுடைய கருப்பையின் அளவை எந்த பெண்ணும் முழுமையாக பார்த்திருக்க இயலாது. சொல்லப்போனால் அவை பாதாமின் அளவில் இருக்கும். இந்த சிறிய பைதான் உயிர் என்னும் அதிசயத்தை உருவாக்குகிறது.9 1554287681

முழுஉடலுக்கும் உதவி

பெண்களின் உடலுக்குள் இருக்கும் பெரிய சக்தி இந்த கருப்பை ஆகும். அவை உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் அவர்களின் இதயம், எலும்புகள் மற்றும் மூளையை பாதுகாக்கிறது. மேலும் கருவுரும் தன்மையையும் வழங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button