ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரக வியாதிகளுக்கு அற்புத நிவாரணம் தரும் ஆவாரம் பூ!!

ஆவாரை இலைகளைப் பறித்துப் பச்சையாக அரைத்து, தலை மற்றும் உடலில் பூசிக் குளித்து வந்தால், உடல் குளிர்ச்சி அடையும். இலைகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்தும் குளிக்கப் பயன்படுத்தலாம்.

பெண்களுக்குச் சூட்டு வயிற்று வலி வரும் சமயத்தில், ஆவாரை இலைகளை அடிவயிற்றில் வைத்துக் கட்டினால் அல்லது முடிந்து வைத்தால் வலி குறைந்து, சிறுநீர் நன்கு பிரியும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், ஆண்களுக்குச் சிறுநீருடன் விந்து வெளியாதல் போன்ற நோய்களும் குணமாகும்.

ஆவாரம் பூக்களைப் பறித்து நிழலில் உலர்த்திப் பொடித்துக் குடிநீராகக் காய்ச்சிக் குடிக்கலாம். இப்பூவை வாழைப்பூவைச் சமைப்பதுபோல, கூட்டுக்கறியாகவோ அல்லது சிறுபருப்பு சேர்த்துக் குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.

p?c1=2&c2=21733245&c4=http%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fwebdunia%2Btamil epaper webtam%2Fsiruneeraga%2Bviyathikalukku%2Barbutha%2Bnivaranam%2Btarum%2Baavaram%2Bboo newsid n190648116%3Fsr%3Ddailyhunt test&c9=m.dailyhunt

இப்படிச் சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.

ஆவாரம்பூப்பொடியை காலை, மாலை உணவுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துத் தண்ணீர், வெந்நீர், பால் இவற்றில் ஏதாவதொன்றில் கலந்து குடித்து வந்தால், அதிகமான உடற்சூடு, வியர்வை நாற்றம், உடலில் உப்புப்பூத்தல், உடல்வறட்சி ஆகியவை குணமாகும்.

ஆவாரை விதைகளை எடுத்து அரிசிக்கஞ்சி போலக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடித்துவந்தால், சர்க்கரை நோயால் ஏற்படும் சோர்வு மாறும்.

ஆவாரம் பட்டை, ஆவாரம் வேர்ப் பட்டை இரண்டுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. 30 கிராம் ஆவாரம் வேர்ப் பட்டைப் பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு கால் லிட்டராக வற்றும் வரை கொதிக்க வைத்துப் பிளாஸ்க்கில் வைத்துக் கொண்டு, ஒரு வேளைக்கு 50 மில்லி என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் குடித்து வந்தால், ரத்தத்தில் கிரியேட்டினின் மற்றும் யூரியா அளவு குறையும். டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.

ஆவாரம் வேர்ப்பட்டை, எள்ளுப்பிண்ணாக்கு முதலிய பொருட்களைக் கொண்டு செய்யப்படும் ஆவாரை லேகியம், சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக் குறைவு மற்றும் உடல் பலக்குறைவு ஆகியவற்றைக் குணமாக்கும். ஆவாரம் பட்டைப் பொடியை நல்லெண்ணெயில் இட்டுக் காய்ச்சி பூசினால், தோல் வறட்சி, வெடிப்பு முதலியன குணமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button