24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
gsfffg
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

தினமும் குங்குமப்பூ நீர் குடிங்க, அப்புறம் பாருங்க என்னலாம் நடக்குதுன்னு..!

நமது பூமியில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிகளும் பல வகையான மகத்துவங்களை கொண்டது. சிறிய புல் முதல் பெரிய மரம் வரை எண்ணற்ற பலன்களை நமக்கு தருகிறது. சாப்பிட கூடிய எல்லா வகையான உணவு பொருளிலும் நன்மைகள் தீமைகள் என பிரித்து பார்க்க வேண்டும்.

அந்த வகையில் சற்றே விலை கூடிய இந்த குங்குமப்பூவின் மகிமையும் எண்ணில் அடங்காதவை. தொடர்ந்து 15 நாட்கள் சிறிது குங்குமப்பூவை நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் பல வித மாயாசாலங்கள் நடக்குமாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் முழுமையாக தெரிந்து கொள்வோம்.
gsfffg
செக்க சிவந்த பூ..!
பார்க்கும் பலருக்கும் இது ஒரு விதமான விந்தை நிறைந்த பூவாக தான் தெரிகிறது. “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பதற்கேற்ப இந்த பூ மிக சிறியதாய் இருந்தாலும் இதில் இருக்க கூடிய நன்மைகள் எண்ணில் அடங்காதவை. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்.

மகிமை பெற்ற பூ..!
இந்த குங்குமப்பூவில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் உள்ளன. இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் இருப்பதால் உடல் வலிமையை அதிகரிக்க செய்யும். 100 கிராம் குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள் இதோ…

வைட்டமின் சி 135%

வைட்டமின் எ 18%

சோடியம் 10%

பொட்டாசியம் 37%

கால்சியம் 11%

காப்பர் 37%

இரும்புசத்து 139%

மெக்னீசியம் 66%

பாஸ்பரஸ் 36%
bbbn
காலையில் தினமும் குடிக்கலாமா..?
சிறிது குங்குமப்பூ கலந்த நீரை காலையில் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வருவதே உகந்தது. 1 கப் மிதமான சுடு நீரில் 20mg முதல் 30mg வரை குங்குமப்பூ கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 வார காலம் குடித்து வந்தால் பின்வரும் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

முடி உதிர்வா..?
15 நாட்கள் தொடர்ந்து குங்குமப்பூ கலந்த நீரை குடித்து வருவதால் உடலில் பல்வேறு நலன்கள் நடக்கும். அதில் முக்கியமானது உங்களின் முடி உதிர்வு குறைவதே. முடி அதிகமாக உதிரும் பிரச்சினை இருப்பவர்களுக்கு 10 நாட்களுக்குள்ளே இந்த குங்குமப்பூ நீர் முடி சார்ந்த பிரச்சினையை குணப்படுத்தி விடுமாம்.

புற்றுநோயை தடுக்கும்…
நீங்கள் குங்குமப்பூ நீரை குடிப்பதால் புற்றுநோய் செல்கள் உங்களின் உடலில் உருவாகாதபடி இவை பார்த்து கொள்ளும். ஏனெனில், இதில் உள்ள crocin என்கிற மூல பொருள் செல்களை புத்துணர்வுடன் வைத்து கொள்ள உதவும். மேலும், ரத்த சோகை, குடல் பிரச்சினைகள் போன்றவையும் குணமாகும்.
fvgg
15 நாட்கள்- பளீச்சென்ற சருமம்..!
நீங்கள் தொடர்ந்து 15 நாட்கள் இந்த குங்குமப்பூ நீரை குடித்து வந்தால் நிச்சயமாக உங்களில் முகம் இரு மடங்காக பொலிவு பெறுமாம். அத்துடன் சரும வறட்சி, சொரசொரப்பு, கருமை ஆகியவை நீங்கி பளீச்சென்ற அழகை தர கூடிய ஆற்றல் பெற்றது இந்த மகத்துவ நீர்.

மாதவிடாய் பிரச்சினைகளா..?
பெண்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த மாதவிடாய் பிணிகள் தான். இதனை நினைத்து இனி வருந்த வேண்டாம். இதற்கு அருமையான குங்குமப்பூ வைத்தியம் உள்ளது. மாதவிடாய் காலங்களில் குங்குமப்பூ நீர் குடித்து வந்தாலே போதுமாம். மாதவிடாய் வலிகள் குறைந்தும், அதிகமான உதிர போக்கு குறைந்தும் காணப்படும்.

hhff
இரட்டிப்பான மூளை..!
15 நாட்கள் குங்குமப்பூ நீர் குடித்து வந்தால் மூளையின் வேலைப்பாடு அதிகரிக்க செய்யும். குறிப்பாக ஞாபக மறதி கொண்டவர்களுக்கு இந்த குங்குமப்பூ நீர் பலனளிக்கும். மேலும், அதிக அநேரம் வேலையில் கவனம் செலுத்தவும், சுறுசுறுப்பாக இருக்கவும் இந்த நீர் உதவும்.

ஆரோக்கியமான இதயம்…
குங்குமப்பூவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் இதயத்திற்கு அதிக ஆரோக்கியத்தை தரும். குறிப்பாக ரத்த நாளங்கள், தந்துகிகள் ஆகியவற்றை சீராக வேலை செய்யும்படி பார்த்து கொள்ளும். மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ராலையும் இது குறைக்க கூடும்.

காபிக்கு பதில் குங்குமப்பூவா..?
நாம் தினமும் காபிக்கு பதிலாக இந்த நீரை குடித்து வரலாம். காபியில் உள்ள காஃபைன் நமது உடலுக்கு அவ்வளவும் ஆரோக்கியத்தை தருவதில்லை. ஆனால், இந்த குங்குமப்பூ ஏரளமான அளவில் நலன்களை தருகிறது. எனவே, காபிக்கு பதிலாக காலை வேளையில் இந்த நீரை குடித்து வந்தால் பலன்கள் ஏராளம்.

செரிமான கோளாறுகளுக்கு…
அஜீரண கோளாறு இருப்பவர்கள் இந்த குங்குமப்பூ நீரை குடித்து வந்தால் எளிதில் குணமடையும். அத்துடன் குடலில் உள்ள புண்கள், வீக்கங்கள் ஆகியவற்றையும் இந்த நீர் சரி செய்து விடும்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த குங்குமப்பூ நீரை குடித்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே..! மேலும், பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

Related posts

வெந்தயம்… கசப்பு தரும் இனிமை!

nathan

இந்த அளவிற்கு மேல் உப்பு சாப்பிட்டால் இதயக்கோளாறு வருமாம்…தெரிந்துகொள்வோமா?

nathan

பீன்ஸின் மருத்துவ குணங்களை தெரிந்துக்கொள்வோம் !!

nathan

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

nathan

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

nathan

ஜீரணத்தை எளிதாக்கும் ஸ்பெஷல் சீரக மோர் -தெரிஞ்சிக்கங்க…

nathan

சிவப்பு நிற பழங்களில் எவ்வளவு நன்மைகள்? தெரிஞ்சிக்கங்க…

nathan

பிறப்புறுப்பு கருத்தடை ஜெல் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

சத்தான கேழ்வரகு இடியாப்பம் செய்முறை விளக்கம்

nathan