மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த பிரச்சனையை வெளியில் சொல்ல கூச்சமா?

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் வெளியே சொல்ல தயங்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல்.

இது இயல்பான ஒன்று தான் என்றாலும், ஏதேனும் நோயின் அறிகுறியாக கூட வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

மாதவிடாய் நேரங்களில், உடல் சூடாக இருக்கும் போது, பூப்பெய்தலின் போது, கர்ப்பமாக இருக்கும் போது வெள்ளைப்படுதல் நிகழலாம்.

அதுவே அதன் நிறம் மற்றும் மணம் மாறி வந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.

மருத்துவம்
வெள்ளைப்படுதல், நோய் கொழுப்பு சத்து உணவுகள் சர்க்கரை இவைகளால் உண்டாகிறது. அதுவும் உங்கள் உடல் பருமனாக இருந்தால் இந்த உணவு வகைகளை தவிர்க்கவும். நிறைய பழங்கள், காய்கறிகள், தானியங்கள், சத்துள்ள பயறு வகைகள் சாப்பிடவும்.
தினமும் 6 லிருந்து 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். அரிப்புடன் கூடிய வெள்ளைபடுதல் நோய்க்கு வாசனை அதிகமுள்ள சோப்புக்கள், குளிப்பதற்காக உபயோகிக்காதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளைப்படுதல் நிற்க காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை எடுத்து தூளாக்கி டீ போடுவது போல கஷாயமாகப் போட்டு தினசரி பருகி வர வெள்ளைபடுதல் மறையும்.
இரவு நேரத்தில் சிறிதளவு கொத்தமல்லியை ஊறவைத்து அந்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். வாழைப்பழம் சாப்பிடுவதற்கு எற்றது.
தினசரி ஒரு வாழைப்பழம் சாப்பிட வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மனஅழுத்தமோ, உளைச்சலோ இருந்தால் வெள்ளைப்படுதல் ஏற்படும். எனவே ரிலாக்ஸ் ஆக இருங்கள்.
காலையிலும் மாலையிலும் உடற்பயிற்சி செய்யுங்கள். மிகவும் குளிர்ந்த நீரில் பிறப்புறுப்பினை 2 முறை தினசரி கழுவி வர வெள்ளைபடுதல் குறையும்.
சிறிது கடுக்காய், நெல்லிக்காய் தாண்றிக்காயை சம அளவு எடுத்துப் பொடி செய்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் காய்ச்சி வைத்துக் கொண்டு மிதமான சூட்டில் பெண் உறுப்பை கழுவி வந்தால் வெள்ளைபடுதல் மறையும்.
வால்நட் இலைகளை வேகவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி பிறப்புறுப்பினை கழுவ பயன்படுத்தலாம்.
யோகர்ட் சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது. அரிப்பு உள்ள இடத்தில் தயிரை பூசலாம்.
மாங்காய் பவுடரை பேஸ்ட் போல செய்து பூசலாம்.நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் லோத்ரா பட்டையை நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு அந்த நீரால் காலை மாலை என இரு வேளை உறுப்பைக் கழுவி வர வெள்ளைபடுதல் கட்டுப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button