அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

Beauty tips .. அழகுக்கு அழகு சேர்க்க!!!! இந்த ஒரு மாத்திரை போதும்….

வைட்டமின் E மாத்திரைகள் பற்றி நிச்சயமாக கேள்விபட்டு இருப்பீர்கள்…. அதனால் நம் சருமம், தலைமுடி மற்றும் முகத்திற்கு ஏற்படும் அழகு சார்ந்த நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த மாத்திரை அனைத்து மருந்தகங்களிலும் சலபமாக கிடைக்கும்.

◆தலைமுடி பராமரிப்பு:

வைட்டமின் E எண்ணெய் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்து வரும்போது அது முடியின் வேர்க்கால்கள் வரை சென்று முடி வளர்ச்சியை தூண்டுகிறது. தலைமுடிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி புதிய முடிகள் வளரத் தொடங்குகிறது. மேலும் இதனால் நீண்ட கருமையான முடியையும் நம்மால் பெற முடியும்.

தலைமுடிக்கு நல்ல ஒரு பளபளப்பை அளித்து பார்ப்பவர் கண்களை பறிக்கும் விதமாக முடியை மாற்றும். இதற்கு இரண்டு வைட்டமின் E மாத்திரையில் உள்ள எண்ணெயை இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயோடு கலந்து முடியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனை வாரம் இரு முறை தவறாமல் செய்து வர மேற்கூறிய பலன்கள் அனைத்தும் நிச்சயமாக கிடைக்கும்.
ccbncbcb
◆முக பராமரிப்பு:

பலருக்கு முகத்தில் கோடுகள், பருக்களால் உண்டான தழும்புகள் இருக்க கூடும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்த வைட்டமின் E எண்ணெயை தடவி வரும்போது தழும்புகள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவாக மாறும். வயதான தோற்றத்தை தரும் சுருக்கங்களையும் நீக்க கூடிய தன்மை இந்த வைட்டமின் E எண்ணெய்க்கு உண்டு.

வைட்டமின் E எண்ணெயை தொடர்ந்து தடவி வந்தால் முகத்தில் ஆங்காங்கே இருக்கும் கருமையை போக்கும். ஹைப்பர்பிக்மென்டேஷன் என்று சொல்லப்படும் மங்கு போன்றவைக்கும் வைட்டமின் E எண்ணெய் ஒரு நல்ல தீர்வினை தருகிறது. ஒரு சிலருக்கு உதடு வெடித்து வறண்டு காணப்படும். அவர்கள் தொடர்ந்து இந்த எண்ணெயை தேனோடு கலந்து தடவி மசாஜ் செய்து வர விரைவில் வறட்சி மறைந்து உதடு மென்மையாக மாறி விடும்.

◆நக பராமரிப்பு:

வலிமையான மற்றும் பளபளக்கும் நகங்கள் வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒரு பவுலில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் இரண்டு வைட்டமின் E மாத்திரைகளை உடைத்து ஊற்றி உங்கள் கை நகங்கள் தண்ணீரில் மூழ்குமாறு 10 – 15 நிமிடங்கள் வைப்பதன் மூலம் அழகான நகங்களை பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button