ஆரோக்கியம் குறிப்புகள்

முதலிரவு அறைக்கு பால் சொம்புடன் வருவது ஏன் தெரியுமா ??

பொதுவாகவே புதிதாக திருமணமான பெண்கள் முதலிரவு அறைக்குள் செல்லும் பொழுது கையில் பால் சொம்புடன் செல்வதே திரைப்படங்கள் சீரியல்கள் உட்பட பலவற்றில் பார்த்திருப்போம். குறிப்பாக திருமணமானவர்கள் நிச்சயம் தங்களுடைய வாழ்க்கையில் அந்த நிலையை நிச்சயம் கடந்து வந்திருப்பார்கள்.

இந்த மரபானது பழங்காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு தற்போது நிலவி வரும் தொழில்நுட்ப காலத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நமது முன்னோர்கள் சொல்லி வைத்துப் போன பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு பின்னால் பல அறிவியல் பூர்வமான கருத்துக்களும் அடங்கியுள்ளன.

இதனை நம்மால் பார்க்க முடியாது. இந்த நவீன காலத்திலும்கூட நம்முடைய முன்னோர்கள் கூறிய பல விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே மாதிரிதான் முதலிரவு பொழுதிலும் மணமகளின் கையில் பால் சொம்பு வழக்கமும் கொண்டுவரப்பட்டது .

புதிதாக திருமணமான பெண்ணின் கையில் அளித்து அனுப்பப்படும் அந்த பாலில் தூளாக்கப்பட்ட பாதாம் பருப்புகளும், குங்குமப்பூவும் கலக்கப்படும். ஏனெனில் குங்குமப்பூவும் பாதாம் பருப்பும் இணைந்து புதிதாக உடலுறவில் ஈடுபடும் ஆண் பெண் இருவருக்கும் நல்ல உடல் வலிமை அளிக்கும்.

சொல்லப்போனால் இந்து மதத்தின் படி பசுவின் பால் மிகவும் புனிதமானது, ஆகையால் தங்களுடைய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் புனிதமான பசும் பாலை அருந்தி விட்டு வாழ்க்கையை தொடங்கினாள் நிச்சயம் நன்மை உண்டாகும் என்று நமது முன்னோர்கள் நம்பினர்.

ஆகையால் இதனை அவர்கள் முறையாக கடைபிடித்து வந்தனர். இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியலும் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதாவது பாதாம்பருப்பை பொறுத்தவரையில் புரதங்கள் நிறைந்த ஒன்றாக காணப்படுகிறது.

இது உடலுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோஜன் ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்க வைத்து நன்மை பயக்கிறது. அதுமட்டுமில்லாமல் குங்குமப்பூவும் பாதாம் பருப்பும் மனிதர்களின் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க கூடியது ஆகும்.

முதலிரவின் போது பாலை உட்கொள்வதால் அது லிபிடோவை அதிகரிக்க செய்கிறது. மேலும் இதன் மூலம் இனப்பெருக்க திசுக்கள் வலுவடைகின்றன. அதுமட்டுமில்லாமல் உடலை குளிர்ச்சி அடைய வைத்து வளமான உடல் உறவுக்கு வழிவகுக்கக் பெரும் உதவியாக அமைகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button