31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
dgghhhhh
ஆரோக்கியம்யோக பயிற்சிகள்

எப்படி செய்ய வேண்டும் தொப்பையை குறைக்க உதவும் யோகா?

வயிற்றில் சேரும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் தொப்பை பெரிதாக இருந்தால், அதனால் இதய நோய்கள், டைப்-2 நீரிழிவு, இன்சுலின் தடை மற்றும் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.

இதற்கு காரணம் கொழுப்புக்கள் தான். உடலில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும் போது, அதனால் பல பிரச்சனைகள் உடலை வேகமாக தாக்குகின்றன. வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைக்க உடற்பயிற்சிகளும், யோகாக்களும் உதவும்.
dgghhhhh
இங்கு தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில எளிய யோகாசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் காலையில் தவறாமல் பின்பற்றினால், நிச்சயம் தொப்பையை வேகமாக குறைக்க முடியும் இந்த ஆசனத்தை செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலிமையடைவதோடு , வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களும் கரையும்.
மேலும் இந்த ஆசனத்தினால் முதுகு, அடி வயிறு மற்றும் உடலின் மேல் பகுதியும் வலிமையடையும். இந்த ஆசனம் தண்டுவடத்தையும் வலிமையாக்கும். முதலில் குப்புறப்படுத்து, இரு உள்ளங்கைகளையும் மார்பு பகுதிக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி , மூச்சை உள்ளிழுத்தவாறு படத்தில் காட்டியவாறு முகத்தையும் , உடலையும் உயர்த்த வேண்டும்.

இந்நிலையில் 15-30 நொடிகள் இருக்க வேண்டும். பின் மூச்சை வெளிவிட்டவாறு பழைய நிலைக்கு திரும்பவும். இப்படி ஒரு நாளைக்கு 5 முறை செய்ய வேண்டும். தனுராசனம் தனுர் என்றால் வில். வில்லைப் போல் உடலை வளைத்து செய்வதால், இந்த ஆசனத்தின் பெயர் தனுராசனம் என்று வந்தது.

இந்த ஆசனத்தின் மூலம் அடிவயிற்று தசைகள் நல்ல நிலையைப் பெறும். மேலும் இந்த ஆசனத்தினால் வயிற்றுக் கொழுப்புக்களும், தொடையில் உள்ள கொழுப்புக்களும் கரையும் மற்றும் செரிமான மண்டலம் நன்கு செயல்பட்டு , மலச்சிக்கல் பிரச்சனை அகலும். செய்யும் முறை இந்த ஆசனத்திற்கு குப்புறப்படுத்து, இரண்டு கைகளாலும் கணுக்காலைப் பிடித்து, படத்தில் காட்டியவாறு உடலை வில் போன்று வளைக்க வேண்டும். இப்படி 5 முறை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

Related posts

உப்புசத்தால் உண்டாகும் பிரச்னைகள்!…

sangika

தம்பதியர் குழந்தை பெற்றுக்கொள்ள தாமதிக்கலாமா? |

nathan

விதைகளைப் பாதுகாப்பது என்பது உயிர்களை பாதுகாப்பதற்கான ஒரு முன் கூட்டிய நடவடிக்கை

sangika

இந்த பழத்தில் பல நோய்களைக் குணப்படுத்தும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன…..

sangika

மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்

nathan

சிறுநீரக கற்களை போக்க சிறந்த மருத்துவம்!

sangika

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

சருமம் மென்மையாக, மிருதுவாக ஜொலிக்க சீரக நீர்!…..

sangika

சூப்பரான கரும்புச்சாறு பொங்கல்!….

sangika