தலைமுடி சிகிச்சை

உங்கள் தலைமுடி வறண்டு, பொலிவிழந்துள்ளதா? அப்ப தினமும் செய்யுங்க…

பொலிவிழந்த, வறண்ட கூந்தல் உங்களை வருத்தமடைய செய்கிறதா? மாறுபட்ட பருவநிலையால் அடிக்கடி கூந்தலின் தன்மையும் பாதிக்கிறதா? இப்படிப்பட்ட சூழலில் கூந்தலை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லையா? போதுமான ஊட்டச்சத்து இல்லாமையும், ஈரப்பதமின்மையும் தான் வலுவிழந்த, சிக்கலான கூந்தலுக்கு முக்கிய காரணம். எவ்வளவு தான் கூந்தல் பராமரிப்பிற்காக ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும், நிறைய நீர் குடித்தாலும் மட்டும் போதாது. போதுமான அளவு எண்ணெய் தேய்ப்பது, ஹேர் பேக் போடுவது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் தான் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

தொடர் கூந்தல் பிரச்சனை மற்றும் முறையான பராமரிப்பு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் பெரும்பாலான பெண்கள் முடியை வெட்டிக் கொள்கின்றனர். இனிமேல் அப்படியெல்லாம் செய்ய வேண்டிய தேவையே இருக்காது. ஆமாம், வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே கூந்தலை மாயாஜாலம் செய்தது போல் அழகாகவும், மிருதுவாகவும் மாற்றிட முடியும்.

 

இங்கே, பொலிவிழந்த, வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற கூந்தலை அழகாக, மிருதுவாக எப்படி மாற்றுவது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை முறையாக செய்து வந்தாலே போதும் அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு குட்-பை சொல்லிவிடலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்…

ஹேர் பேக் #1

தேவையான பொருட்கள்:

* முட்டை

* தயிர்

இந்த இரண்டு பொருட்களை வைத்தே கூந்தலின் பொலிவை அதிகரித்து விடலாம். கூந்தல் நீளத்திற்கு தகுந்தாற்போல் முட்டையும், தயிரும் எடுத்துக் கொள்ளவும். அதாவது, தோள்பட்டை வரை முடி இருந்தால் ஒரு முட்டையும், இடுப்பு வரை இருந்தால் 2 முட்டையும், இடுப்பிற்கும் கீழே இருந்தால் 3 முட்டையும் எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

* ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சரியாக இருக்கும். 2 முட்டைக்கு மேல் தேவைப்பட்டால் 3 டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும். முட்டைக்கு ஏற்ற அளவு தயிர் எடுத்துக் கொள்ளவும்.

* இந்த ஹேர் பேக் செய்வதற்கு முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

* முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு கலந்துக் கொள்ளவும்.

* இந்த கலவையை முடியின் மீது மட்டும் தடவவும். (ஸ்கால்ப்பில் தடவ வேண்டாம்)

* 1 மணிநேரம் கழித்து சாதாரண நீரினால் தலையை அலசிடவும்.

* மறுநாள் ஷாம்பூ போட்டு குளித்துக் கொள்ளவும்.

* நல்ல பலன் கிடைக்க, இந்த ஹேர் பேக்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.

உயிரற்ற கூந்தலுக்கான காரணம்

முடி வறட்சி மற்றும் உயிரற்ற நிலைக்கு முக்கிய காரணம் போதுமான ஈரப்பதம் இல்லாதது தான். சருமத்தை போலவே தலை முடிக்கும் ஈரப்பதம் தேவைப்படும். ஹேர் க்யூட்டிகள்ஸ் (இறந்த செல்களான இது முடியை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும்) ஈரப்பதத்தை உறிஞ்சி உள்ளே அனுப்பும். ஆனால், அதிகப்படியான மாசுப்பாட்டின் காரணமாக, தலையில் சேரும் அதிகமான அழுக்கு, முறையாக சுத்தப்படுத்தபடாததன் காரணமாக, முடியை உயிரற்றதாகி விடுகிறது. அது தவிர, ஈரப்பதமின்மையால் கூந்தல் வறட்சி ஆகி, சிக்கல் நிறைந்த கூந்தலாக மாறிவிடும். ஷாம்பூ மற்றும் எண்ணெயை மாற்றுவதால் மட்டும் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பி விட முடியாது. கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் தான் கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹேர் பேக்கை உபயோகித்து பாருங்கள் எப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற, உயிரற்ற கூந்தலும் ஆரோக்கியமாக மாறிவிடும்.5 hairmask 1

ஹேர் பேக் #2

தேவையான பொருட்கள்:

* பாதாம் எண்ணெய் – 1/4 கப்

* முட்டை – 1

பயன்படுத்தும் முறை:

* 1/4 கப் பாதாம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டை எடுத்து ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* அந்த கலவையை ஸ்கால்ப் முதல் முடி நுனி வரை நன்கு தடவவும்.

* 40 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து பிறகு ஷாம்பூ போட்டு குளித்திடவும்.

* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூ சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

* பாதாம் எண்ணெயானது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தரக்கூடியது. மேலும், முட்டையில் உள்ள புரதச்சத்து முடி உதிர்வை தடுத்து, மிருதுவான கூந்தலாக மாற்றிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button