ஆரோக்கியம் குறிப்புகள்

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் 7 ஆசைகள்!!!

ஆசைகள் மற்றும் விருப்பங்கள் பெண்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்று எண்ண வேண்டாம். பெண்களை விட ஆண்களுக்கு அதிக அளவில் விருப்பங்களானது இருக்கும். அதிலும் அத்தகைய விருப்பங்கள் பொதுவானவையே.

மேலும் இந்திய ஆண்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக தங்களை சுற்றியுள்ள வட்டத்தை உடைத்தெறிந்து காலத்தை கடந்து வர ஆரம்பித்து விட்டார்கள். இனி அவர்களை தடுக்கும் சக்தியும் இல்லை. சரி, என்றாவது நாம் இந்திய ஆண்களின் கனவுகள் அல்லது தேவைகளை என்னவென்று யோசித்திருக்கோமா? இதோ… ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறோம். அதில் சிலவற்றை பார்க்கலாமா!!!

பதவி

இந்திய ஆண்கள் பெரிய இலட்சியவாதிகளாக மாறிவிட்டார்கள். இனியும் ஒரு சாதாரண திரைக்குப் பின்னால் ஈடுபடும் வேலைகளை செய்வதில் அவர்கள் திருப்தி அடைவதில்லை. அதிக தகுதியுடன் விளங்கும் அவர்கள், மேலே ஏறுவதற்கு விடாமுயற்சியுடன் வேலை பார்ப்பார்கள். பதவி என்பது அவர்களுக்கு மிகவும் முக்கியம். அவர்கள் சாதித்தவைகளை அளக்க இந்த பதவியே உதவுகிறது. மேலும் அவர்களுக்கு அது ஒரு தனி மரியாதையை சம்பாத்தித்துக் கொடுக்கும்.

பணம்

அனைத்து கடின உழைப்பிற்கும் பதில் அதற்கேற்ற சம்பளம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்திய ஆண்கள் சிக்கனமாக செலவு செய்வதை விட்டு விட்டார்கள். பிடித்த உணவகம் செல்ல, பரிசுப் பொருட்கள் வாங்க மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் வாங்க அதிக பணம் தேவை. அப்படி அவர்கள் செலவு செய்வது ஒரு அன்றாடம் செய்யும் செயலாக மாறி விட்டது.15 1366022975

புகழ்

பெயருக்கும் புகழுக்கும், அது பெரியதோ சிறியதோ, ஆசைப்படாதவர்கள் யாராக இருக்க முடியும். நாம் பெரிய சினிமா நடிகன் இல்லையென்றாலும், நம் அலுவலகத்தில் நாம் உள்ளே நுழையும் போது அனைத்து தலைகளும் நம்மை நோக்கி திரும்ப வேண்டும் என்று எண்ணுவது ஒவ்வொரு இந்திய ஆண்களின் கனவே.

பெண்கள்

இந்த பட்டியலில் பெண்களையும், மனைவியையும் தனித்தனியாக பிரிப்பதற்கு காரணம் உண்டு. ஒரு இந்திய ஆண், தான் வாழ்க்கையில் கல்யாணம், குழந்தைகள் என்று பொறுப்புகளை உடனே சுமக்கத் தயாராக இருப்பதில்லை. இக்காலத்து இந்திய ஆண், முதலில் பெண்களிடம் நட்பு பாவித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

மனைவி

இந்திய ஆண்கள், தனக்கு மனைவியாக வருவதற்கு அழகான, அறிவுள்ள மற்றும் குடும்பச் சூழலுக்கு ஏற்ப அனுசரித்து நடக்கும் ஒரு இந்திய பெண்ணே மனைவியாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

குழந்தைகள்

ஒவ்வொரு ஆண்களுக்கும் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக குழந்தை செல்வம் கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஆயிரம் சம்பாதித்தாலும், பலவற்றை சாதித்தாலும், பல வெற்றிகளை அடைந்தாலும், நம்மிடம் விளையாட, அவர்கள் வளர்வதை காண, அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய ஒரு குழந்தை இல்லையென்றால் சாதித்த அனைத்தும் வெறும் தூசு. ஒவ்வொரு ஆணும் தன் பரம்பரை ரத்தம் தன்னுடன் அழிய நினைப்பதில்லை. அவனுடைய வயதான காலத்தில் தன் குழந்தையின் வளர்ச்சியை, சாதனைகளை எண்ணி பெருமை பட விரும்புவான்.15 13660231

கார்

கார்கள் வைத்திருப்பதே முக்கியம். அது சிறியதோ அல்லது ஒரு பெரிய எஸ்.யு.வி ரகமோ என்பது ஒரு பொருட்டு இல்லை. ஒரு இந்திய ஆணிடம் கார் இருப்பதே முக்கியம். இது வெற்றியின் சின்னமாகவும் சமுதாயத்தில் தலை தூக்கி நிற்கவும் உதவும்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button