அறுசுவை இனிப்பு வகைகள்

பூந்தி செய்வது எப்படி ??? tamil cooking

தேவையான பொருட்கள் :

கடலை மாவு _ 1/4 கிலோ

நெய் _ சிறிதளவு

கேசரி பவுடர் _ சிறிதளவு

சீனி _ 1/2 கிலோ

டால்டா அல்லது ஆயில் _ தேவையான அளவு

செய்முறை :

சீனியை ஒரு அங்கலமான பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். கடலைமாவை தண்ணீர் சேர்த்து கேசரி பவுடர் சிறிது சேர்த்துக் கொள்ளவும். தோசை மாவு போல் கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் டால்டா அல்லது நெய்யை காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தேய்த்து எண்ணெயில் போடவும். எண்ணெயில் விழுந்த மாவை அதிகம் சிவக்காமல் வெந்ததும் எடுத்து சீனிப் பாகில் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து ஒரு பாயில் போடவும் சுவையான பூந்தி ரெடி.

Related posts

வாழைப்பழ லஸ்ஸி பருகியது உண்டா?….

sangika

பட்டர் சிக்கன்

nathan

உளு‌ந்து ல‌ட்டு

nathan