ஆரோக்கிய உணவு ஆரோக்கியம்

healthy tips,, வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

இந்த காயினை அதிகம் இன்றைய மக்கள் மறந்து விட்டனர். கிராம புறங்களில் சர்க்கரை நோய் குறைவாக காணப்படுவதன் காரணமே அங்கு வாழைக்காய், அவரைக்காய், பீர்க்கை, புடலை போன்ற காய்கறிகள் அதிக புழக்கத்தில் இருந்ததால்தான்.

வாழைக்காய் மற்றும் வாழை மரம் தொடர்பான அனைத்துமே நமது உடலில் இருக்கும் ரத்த செல்களில் குளுகோஸ் அதிகம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் காலையில் மலம் கழிப்பது ஒரு ஆரோக்கிய அறிகுறியாகும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைக்காய் சாப்பிடுவது நல்லது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து இருக்கிறது. இது குடல்களை சுத்தப்படுத்தி,அதன் இயக்கத்தை அதிகப்படுத்துகிறது.மேலும் மலத்தை இலகுவாக்கி, எளிதில் வெளியேற்றி மலச்சிக்கலை போக்குகிறது..

*குறிப்பாக வாழைக்காய் அதிக நார் சத்து கொண்டது. ஜீரண கோளாறு மற்றும் குடல் பிரச்சினைக்கு பெரிதும் உதவும்.

* பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்திற்கு நல்லது.

* உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க வல்லது.

* நார்சத்து மிகுந்ததால் எடை குறைப்பிற்கு நன்கு உதவுகிறது.

* வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது.

* நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்தது.

*சிறுநீரக செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

இத்தகு சிறந்த குணங்கள் கொண்ட வாழைக்காயினை அமாவாசைக்கு மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் நன்கு பயன்படுத்தலாம்.

Related posts

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

nathan

ருசியான பருப்பு போளி செய்ய…!

nathan

ஆண்களும் தெரிஞ்சிக்கலாமே,, இந்த ஆறு அறிகுறி இருந்தா பெண்கள் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்…

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: