30.5 C
Chennai
Saturday, May 11, 2024
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள்

 

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிந்து கொள்ளுங்கள் பெண்களுக்கு தலை முடி என்பது கூடுதல் அழகை சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால் அதை அலங்கரிக்கவும், விதவிதமான ஸ்டைல்களை புகுத்தவும், பலரும் முற்படுவர். இப்படி செய்தால் முடியில் பிரச்சனை இல்லாமல் இருக்குமா என்ன? அதிலும் முடி கொட்டுவது என்பது இல்லாமல் இருக்குமா? ஆம், அதுவும் இன்றைய சூழ்நிலையில், இந்த பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. இன்றைய தலைமுறைக்கு அளவிற்கு அதிகமாகவே முடி கொட்டும் பிரச்சனை நிலவுகிறது.

முப்பது வயதை தாண்டுவதற்கு முன்பாகவே பலருக்கு தலை வழுக்கையாகி விடுகிறது. இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு பிரிவினருக்கும் பொருந்தும். பொதுவாக ஒரு நாளைக்கு 75-100 முடி கொட்டுவது இயல்பே. அதையும் மீறி கொட்டினால் தான் அதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். இப்போது முடி கொட்டுவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

• முடி கழிதலுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். பரீட்சையை சந்திக்க பயம், நிராகரிப்பை ஏற்க பயம், கல்லூரியில் அனுமதி பெற வேண்டுமென பயம் என இப்படி பல காரணங்களால் இளைய தலைமுறை மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

• மாசு மற்றும் சுற்றுப்புற சுகாதார கேடு போன்றவைகளும் கூட முக்கியமான ஒரு காரணம்.

• செபோர்ஹோயிக் தோல் அழற்சி போன்ற பூஞ்சைத் தொற்று ஏற்படுவதால், தலை சருமம் அரிப்பு எடுத்து, முடி கழிதல் ஏற்படும். இவ்வகை தொற்று பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் விடலை பசங்களைத் தான் அதிகம் தாக்கும்.

• சடையை இறுக்கமாக பின்னுவது அல்லது குதிரை வால் ஸ்டைல் என ஏதாவது புதிய ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்கும் போது, முடியை இழுத்து பிடித்து கட்டும் போது, அவை வேரிலிருந்து பிடுங்கி கொண்டு வரலாம். இதனால் இது ஆங்காங்கே முடி இல்லாமல் ஆக்கிவிடும்.

• ஹேர் ஸ்ப்ரே, ஜெல் போன்ற சிகை அலங்காரப் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது முடியின் தரத்தை குறைத்துவிடும். நாளடைவில் முடி கழிதலும் ஏற்படும். அதனால் முடிக்கு ஏற்ற ஷாம்பு மற்றும் கண்டிஷனரை தேர்ந்தெடுத்து, அதை மட்டும் பயன்படுத்துங்கள். சந்தையில் உள்ள கண்ட பொருட்களையெல்லாம் பயன்படுத்தாதீர்கள்.

• பரம்பரை பிரச்சனையும் கூட முடியின் தரத்திற்கும், அடர்த்திக்கும் ஒரு காரணமாக அமையும்.

• போதுமான நேரம் தூங்கினால் தான் முடி அணுக்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி பெறும். இரவில் வீட்டில் அதிக நேரம் விழித்திருந்தால் கூட, அது முடியை பாதித்துவிடும்.

• அதிக அளவில் காய்கறி மற்றும் பழங்களுடன் தினமும் நல்ல உணவை உட்கொண்டால், தலை முடி ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் முடியை பாதுகாக்க தேவையான வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து, உடலில் இருப்பது அவசியமானது.

Related posts

கூந்தலை பாதுகாக்க இயற்கையாக பாதுகாக்க இதைப்படிங்க

nathan

இந்த ஒரு ட்ரிக்கை ஃபாலோ பண்ணா, வேகமாய் முடி வளரும்!

nathan

முடி உதிர்வதை கட்டுப்படுத்தும் அரிய மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

மழைக்காலத்தில் உங்க முடி கொட்டாமல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர

nathan

பொடுகு பிரச்சனையில் இருந்து தலைமுடியை பராமரிக்க இந்த பொருள் போதும்! தெரிஞ்சிக்கங்க…

nathan

முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!

nathan

தலைமுடி பழுப்பு நிறமாக மாறுவதை தடுக்கும் வழிமுறைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! வெள்ளை முடி அதிகமா இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan