தலைமுடி சிகிச்சை

தெரிஞ்சிக்கங்க… இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா?

அனைவரது மனதிலும் வெள்ளை முடி வந்துவிட்டால் உடனே வயதாகிவிட்டதென்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் வெள்ளை முடி வருவதற்கான உண்மையான காரணம் முடியின் வேர் பகுதியில் உள்ள மெலனின் என்னும் நிறமிப்பொருள், முடியின் நீளத்திற்கு உற்பத்தி செய்ய முடியாததால், முடியின் நிறம் மாறுபடுகிறது. அதுமட்டுமல்லாமல் கூந்தல் வெள்ளையாவதற்கு பல காரணங்கள் உள்ளன.

இத்தகைய காரணங்கள் சரியாக தெரியாததால் தான், இளமையிலேயே வெள்ளை முடியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஆகவே அத்தகைய காரணங்கள் என்னவென்று சற்று படித்து தெரிந்து கொண்டு, வெள்ளை முடி வருவதைத் தடுங்கள்.

 

மரபணு பண்புகள்
பெற்றோரின் மரபணுக்கள் மூலமாகவும் வெள்ளை முடிகள் வருகின்றன. அதாவது பெற்றோருக்கு வெள்ளை முடி சிறு வயதிலேயே வந்தால், அவர்களது குழந்தைகளுக்கும் சிறு வயதிலேயே வெள்ளை முடிகள் வந்துவிடுகின்றன. அவ்வாறு வந்தால், அந்த வெள்ளை முடியை தடுக்க முடியாது.

வைட்டமின்கள் குறைபாடு

உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், அதிலும் முக்கியமாக வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், வெள்ளை முடிகள் வரும். அதற்காகத் தான் வைட்டமின் அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளை அதிகம் உண்ணச் சொல்கின்றனர். வைட்டமின் குறைபாட்டினால், உடலில் நோய்கள் மட்டும் வருவதில்லை. அதனால் அழகும் தான் கெடும்.

தைராய்டு

வெள்ளை முடிகள் வருவதற்கு மற்றொரு காரணம், தைராய்டு சுரப்பிகள் சரியாக இயங்காமல், அதாவது அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக சுரந்தாலும், வெள்ளை முடிகள் வந்துவிடும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்
பெரும்பாலோனோருக்கு வெள்ளை மற்றும் கிரே முடிகள், அதிக மனஅழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது பரபரப்பான வாழ்க்கை முறையின் காரணத்தினாலும், வெள்ளை முடிகள் வருகின்றன. இதனை அனைத்து அழகியல் நிபுணர்களும் ஒப்புக் கொள்கின்றனர். ஆகவே இவை அனைத்தையும் விட்டு, ஆரோக்கியமான, மனஅழுத்தமில்லாத வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தால், வெள்ளை முடிகள் வருவதைத் தடுக்கலாம்.23 1408

புகைப்பிடித்தல்

வெள்ளை முடிகள் வருதற்கான காரணத்தை கண்டறிய சிகரெட் பிடிப்பவர்களின் மீது மேற்கொண்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடிகள், சாதாரணமாக இருப்பவர்களுக்கு வரும் வெள்ளை முடியை விட நான்கு மடங்கு அதிகமாக வரும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே சிகரெட் பிடிக்காமல் இருந்தால், வெள்ளை முடிகள் வராமல் தள்ளிப்போடலாம் என்றும் கூறுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button