ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க… கொடூர குணம் கொண்ட மிகவும் ஆபத்தான நாய் இனங்கள்!!!

பொதுவாக நாய்கள் மனிதனுக்கு மிகச்சிறந்த நண்பனாக இருக்கக்கூடியவை. பலருக்கு செல்லப்பிராணிகள் என்றால் முதலில் வாங்க நினைப்பது நாய் தான். உலகில் நாய்களை கடவுளின் அருமையான படைப்புக்களுள் ஒன்று என்று சொல்லலாம். ஏனெனில் நாய்கள் அந்த அளவில் மனிதருக்கு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக இருக்கும். இத்தகைய நாய்களில் பல்வேறு வகையான இனங்கள் உள்ளன. மேலும் அந்த வகைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டிருக்கும்.

பார்ப்பதற்கு ‘நச்’னு இருந்தாலும் இதுங்க தான் உலகிலேயே செம நச்சுமிக்க பாம்புகளாம்!!

அதுமட்டுமின்றி, சில நாய்கள் பார்ப்பதற்கு கொடூரமாக காணப்பட்டாலும், உண்மையில் அவை அமைதியான நாயாக இருக்கும். இப்போது உலகில் உள்ள மிகவும் அழகாக இருக்கும் மற்றும் கொடூரமான குணங்களைக் கொண்ட சில நாய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.31 1406804556

பிட்புல்

பல்வேறு நாடுகளில் இந்த வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இவை அந்த அளவில் மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான நாய்கள். இவற்றை சரியான நேரத்தில் அதாவது குட்டியாக இருக்கும் போதே சரியாக பயிற்சியளித்து வளர்க்காவிட்டால், இது மிகவும் ஆபத்தானவையாக மாறும். மேலும் இவை சற்றும் சிந்திக்காமல் உடனே தாக்குதலில் இறங்கிவிடும்.31 1406804564

ராட்வீலர்

பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்கள் இந்த வகையான நாய் இனங்களைத் தான் சிறு குட்டியாக இருக்கும் போதோ செல்லப்பிராணிகளாக தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த நாயும் மிகவும் ஆக்கிரோஷமான குணம் கொண்டது. அதுமட்டுமின்றி இந்த நாய் வளர்த்து வருபவரின் பேச்சை மட்டும் தான் கேட்கும். அதிலும் இது கோபத்துடன் ஒருவரை தாக்கும் போது சிறிதும் யோசிக்காது.31

ஹஸ்கீஸ்

ஹஸ்கீஸ் வகை நாய் இனங்கள் பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும். அதே சமயம் இந்த வகையான நாய் இனங்கள் மிகவும் வலிமையானவை மற்றும் இவையே உலகிலேயே மிகவும் புத்திசாலியான நாய்களுள் ஒன்றும் கூட. அதனால் தான் பனிப்பிரதேசங்களில் சக்கரமில்லா வண்டியை இழுக்க இந்த வகையான பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இதன் கோபத்தை யாராவது சீண்டினால், இவை சற்றும் யோசிக்காமல் கடுமையாக தாக்கிவிடும்.31 14068

டாபர்மேன் பின்ஸ்சர்ஸ்

இந்த வகையான நாய் இனங்களுக்கு முறையான பயிற்சியை கொடுத்து வளர்த்து வந்தால், இதனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் இது சிறந்த பாதுகாப்பை வழங்கக்கூடியவை மற்றும் மிகவும் புத்திசாலியான, அதே சமயம் ஆபத்தானதும் கூட. குறிப்பாக வீட்டில் திருடன் வந்து, அவன் இந்த டாபர்மேனிடம் சிக்கினால், அவ்வளவு தான். நினைக்க முடியாத அளவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.31 140680458

பிரேசிலியன் மஸ்டிஃப்

இது வித்தியாசமான நிறம் கொண்ட, அதே சமயம் இயற்கையிலேயே கொடூர குணம் கொண்டது. மேலும் இதன் உயரம் மற்றும் குணத்தினாலேயே தென் அமெரிக்காவில் இதனை செல்லப்பிராணியாக வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.31 140680459

கிரேட் டேன்

இந்த நாய் தான் உலகிலேயே மிகவும் உயரமான நாய். இந்த வகையான நாய் இனங்களானது ஜெர்மனியில் உள்ளது. இது உண்மையில் மிகவும் அமைதியான குணம் கொண்டதால், இது செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கு மிகவும் சிறந்தது. ஆனால் இதன் வித்தியாசமான தோற்றத்தினால், இது பார்ப்பதற்கு கொடூரமான நாய் போன்று காணப்படும்.31 140680

அகிடா இனு

இந்த வகையான நாய்கள் ஜப்பானில் உள்ள மலைப்பகுதிகளில் இருக்கும். இந்த வகையான நாய் இனங்கள் குடும்பத்தில் நன்கு தோழமையுடன் பழகும். ஆனால் அதே சமயம் இதற்கு கோபம் வந்தால் அல்லது வெறி பிடித்தால், இதனை அடக்குவது என்பது மிகவும் கடினம்.31 1406804

புல் டெரியர்

இந்த வகையான நாய்கள் மிகவும் வலிமையுடன் இருக்கும். மேலும் இதன் தசை திசுக்களானது மிகவும் வலிமையுடன் பிணைக்கப்பட்டிருக்கும். அதுமட்டுமின்றி, இது பார்ப்பதற்கு அமைதியான நாய் போன்று இருந்தாலும், இது வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருப்பதால், இதனை மிகவும் ஆபத்தான நாய் இனங்களின் ஒன்றாக பலர் கருதுவார்கள். ஆனால் உண்மையில் இவை அமைதியான குணம் கொண்டவை.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button