மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் பையில் இருக்க வேண்டிய 12 பொருட்கள்!!!

கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும் போது, அவர்களின் கையில் தயாராக ஒரு பை இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் தேவையான அனைத்தையும் அதில் நிரப்பி கொள்ளுங்கள். அதற்காக இன்றைய நாகரீகத்திற்கு இணையாக உள்ளவாறு இருக்க வேண்டும் என்றெல்லாம் அர்த்தம் இல்லை.

உங்களின் மருத்துவ கோப்புகள்

இவைகளை கண்டிப்பாக தவற விடக்கூடாது. பிரசவத்திற்கு முன்பாக கடைசியாக நீங்கள் சோதனைக்காக சென்று வந்த வரையிலான அனைத்து கோப்புக்களையும் உங்கள் பையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

டிரெஸ்ஸிங் கவுன் அல்லது நைட்டி

லூசாகவும் மெதுவாகவும் உள்ள ஆடைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை மருத்துவமனை வழங்கினாலும் கூட, கையில் கூடுதலாக வைத்துக் கொள்வது நல்லதே. கசிவு ஏற்படும் போதோ அல்லது பிரசவம் நடக்க வேண்டி நடை கொடுக்கும் போதோ உங்களுக்கு பயன்படும். அதே போல், பிரசவத்திற்கு பின்னரும் கூட மாற்றிக் கொள்ள தேவைப்படலாம்.

காலணி

தட்டையான, லேசான காலணிகளை பயன்படுத்துங்கள். அதனை கழற்றி மாட்ட சுலபமாக இருக்கும்.

காலுறைகள்

வலியால் நீங்கள் அழும் போது உங்கள் பாதங்கள் குளிர்ந்து விடும் – நம்பினால் நம்புங்கள். தட்பவெப்பநிலை இனிமையாக இருந்தாலும் இது ஏற்படும். அதனால் உங்கள் கணவர் அல்லது மருத்துவமனை செவிலியரை உங்களுக்கு காலுறைகள் அணிய உதவி செய்திட சொல்லுங்கள். பிரசவத்தின் போது அது உங்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தினால், மீண்டும் அவர்களின் உதவியோடு அதனை கழற்றி விடுங்கள்.

லோஷன்கள் மற்றும் உதடு பாம்

நீங்கள் அடிக்கடி வறண்டு போவதை போல் உணர்வீர்கள். அப்படிப்பட்ட நேரத்தில் மாய்ஸ்சரைஸர் மற்றும் உதடு பாம்கள் தான் உங்களுக்கு உதவிடும். அவைகளை கையோடு வைத்திருப்பதால், பிரசவத்திற்கு பின்னரும் கூட அது உங்களுக்கு கை கொடுக்கும்.

நர்சிங் கவுன்

நீங்கள் நீண்ட நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியிருந்தால், உங்களுக்கு 4 அல்லது 5 நர்சிங் கவுன்கள் தேவைப்படும். அதற்கு காரணம் துவைப்பதில் தாமதம் ஏற்பட்டால் மாற்று கவுன் வேண்டுமல்லவா? இவ்வகை கவுன் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கும் சுலபமாக இருக்கும்.

வசதியான உள்ளாடைகள்

நீங்கள் எப்போதும் அணியும் உள்ளாடைகளை ஒதுக்கி வைத்து விட்டு, காட்டன் உள்ளாடைகளை வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நிமிடத்தில் வாங்கும் போது குழப்பங்கள் ஏற்படும். அதனால் முதலிலேயே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அணியும் அளவை விட அடுத்த அளவை தேர்ந்தெடுங்கள். ஒரு வேளை சிசேரியனாக இருந்தால், பெரிதாக இருக்கும் உள்ளாடை உங்கள் புண்களை அதிகமாக உரசாது.

நர்சிங் ப்ரா மற்றும் பேட்

அவைகளினால் ஏற்படும் வசதியை நீங்கள் அறியும் போது, அதன் அத்தியாவசியம் உங்களுக்கு புரிய வரும். மேலும் தொடர்ச்சியாக ஒழுகும் மார்பக பாலினால் ஏற்படும் தொந்தரவில் இருந்தும் உங்களை காக்கும்.

டையப்பர்

முடிந்தால் பெரிய டையப்பர் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு இரவும் பகலும் அடிக்கடி டையப்பர் மாற்ற வேண்டி வரும். உங்கள் குழந்தையின் சருமத்தில் டையப்பர் பட வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால், வீட்டில் தயார் செய்த காட்டன் பேட்களை எடுத்துச் செல்லுங்கள்.

காலுறைகள் மற்றும் ஷூக்கள்

சிறிய அழகிய காட்டன் காலுறைகள் மற்றும் ஷூக்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

தொப்பிகள்

குழந்தையின் தலை மற்றும் காதுகளை மூடும் படியான தொப்பிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அது குழந்தையை வெப்பத்துடன் சொகுசாக வைத்திடும்.

குழந்தைக்கான போர்வை

உங்கள் குழந்தைக்கு வெப்ப உணர்வு வேண்டும் தானே.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button