அழகு குறிப்புகள் முகப் பராமரிப்பு

beauty tips.. கரும்புள்ளி பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி?

முக அமைப்பை தீர்மானிப்பதில் மூக்கு முக்கிய பங்குவகிக்கின்றது. பலருக்கும் மூக்கில் வரும் முக்கிய பிரச்சனை மூக்கின் பக்கவாட்டிலும் சுற்றிலும் வரும் கரும்புள்ளிகள். இது அவர்களின் அழகை கெடுத்துவிடும். இந்த பிரச்சனையிலிருந்து நமது மூக்கை பாதுகாப்பது எப்படி?

நீண்ட நாட்களாக இருக்கும் இந்த கரும்புள்ளிகளுக்கு ஆவி பிடித்தல் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆவி பிடிப்பதற்கு முன் மூக்கின் நுனிகளில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்த நீரை எடுத்து நன்றாக வேர்க்கும் வரை ஆவி பிடிக்க வேண்டும்.

பின்னர் நல்ல வெளிச்சமான இடத்தில் உட்கார்ந்து கண்ணாடியை பார்த்துக் கொண்டு கரும்புள்ளி ரிமூவரால் இந்த ரிமூவர் ஃபேசியல் கிட்டில் இருக்கும். இல்லையென்றால் ஸ்டெரிலைஸ் ஸ்பூனின் முனை கொண்டு அந்த கரும்புள்ளிகளை மெதுவாக அழுத்த வேண்டும். வேரோடு வெளியே வரும் கரும்புள்ளிகளை துடைத்து எடுத்துவிடுங்கள்.

பின்னர் குளிர்ந்த நீரில் மூக்கினை நன்றாக கழுவ வேண்டும். இந்த முறையை பின்பற்றி மூக்கில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை புள்ளிகளை முழுதுமாக நீக்கி விடலாம். எண்ணெய் உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும், இந்த எண்ணெய் பசைகள் மூக்கில் கரும்புள்ளிகள் உருவாக வழி வகுக்கும்.

Related posts

கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க இத டிரை பண்ணுங்க…

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

nathan

ஸ்கின் லைட்டனிங் சிகிச்சையை வீட்டில் செய்வது எப்படி?

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: