மருத்துவ குறிப்பு

வெளியே சொல்ல முடியாத தர்மசங்கடமான உடல் பிரச்சனைகள்!!!

31 1433048947 29 1432901900 leakingnipples

இன்றைய விஞ்ஞான மருத்துவத்தால் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விட்டது. என்னதான் சில வியாதிகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதன் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும். மனிதர்களை நோய் தாக்கத்திலிருந்து இருந்து விடுவிக்க பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் முந்தைய காலத்தை விட இப்பொழுது மரணத்தின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்போதெல்லாம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை கூட பெருமளவு குறைந்து உள்ளது. இருப்பினும் பல மக்கள் தங்களின் மருத்துவ நிலையை ஒழுங்காக பார்த்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, முற்றிய நிலைக்கு பின் மருத்துவரை நாடி செல்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மருத்துவரிடம் தங்கள் நிலைமையை சொல்ல அவர்களுக்கு தர்மசங்கடமாக இருப்பதே. நமது உடல்நிலையை புறக்கணித்து வந்தால் நோயின் தாக்கம் அதிகமாகிவிடும். அந்த முற்றிய நிலையில் மருத்துவர்களால் கூட உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகலாம். ஆகவே, உடலில் எந்தவொரு உடல்நல பிரச்சனை தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும். தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் உடல்நல பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் பார்க்கலாமா?

மார்பக காம்பில் கசிவு

கப சுரப்பியில் இருந்து ப்ரோலக்டின் எனும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் தாய்மார்களின் பால் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. இது பால் சுரப்பியை தூண்டி பாலை சுரக்க செய்கிறது. நீங்கள் கர்ப்பமாக இல்லாத போதும், தாய்ப்பால் கொடுக்காத போதும் உங்கள் மார்பகத்தில் கசிவு இருந்தால், நீங்கள் ஹைப்பர் ப்ரோலக்டிமேனியா என்ற நிலையால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். துணை சுரப்பியில் கட்டி ஏற்படுவதால் இது உண்டாகிறது.

உடலுறவில் விருப்பம் இல்லாமை

உடல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் லிபிடோ குறைபாடு ஏற்படலாம். இதனை சரியாக சோதித்து பார்த்து, மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு, ஈஸ்ட்ரோஜென் அளவு குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படுவதால் லிபிடோ குறைபாடு ஏற்படுகிறது. அதனால் மன சோர்வு ஏற்பட்டு உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகிறது.

வியர்த்து வடிதல்

வியர்வை சுரப்பி அதிகமாக சுரப்பதால் அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பம், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் வியர்வை சுரப்பி அதிகமாக தூண்டப்படுகிறது. இருப்பினும் சில ஹார்மோன் பிரச்சனைகளாலும் கூட அதிகமாக வியர்க்கலாம். சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட வியர்வை உண்டாகலாம். எனவே மருத்துவரை சந்தித்தால் நமது வியர்வைக்கான காரணத்தை அறிந்து அதனை கட்டுப்படுத்துங்கள்.

பெண்ணுறுப்பில் நாற்றம்

பொதுவாகவே பாக்டீரியா வளர்ச்சி ஏற்படாமல் இருக்க பெண்ணுறுப்பில் அமிலத்தன்மை இருக்கும். இருப்பினும் விந்தணு, மாதவிடாய் காலம் மற்றும் சில சோப்புகளால் பெண்ணுறுப்பில் பாக்டீரியா வளர்ச்சி ஏற்படலாம். இதனால் பெண்ணுறுப்பில் அமிலத்தன்மை குறைந்து, காரத்தன்மை உண்டாகும். பெண்ணுறுப்பில் பாக்டீரியா வளர்ச்சி அதிகரிக்கையில் நாற்றம் ஏற்படும். உடலுறவு சார்ந்த நோய்களாலும், பூஞ்சை தொற்றுக்களாலும் கூட இது ஏற்படுவதால், மருத்துவரிடம் சென்று இதற்கான சரியான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

மலம் கழிக்கும் போது வலி

மலவாயில் சிறிய கீறல் அல்லது வீக்கம் இருந்தால் வலி ஏற்படும். சில நேரம் மலத்துடன் சேர்த்து இரத்தக்கசிவும் ஏற்படும். இதனோடு நில்லாமல் கீழ் முதுகில் குறுக்கு வலி மற்றும் அதிகமான மாதவிடாய் போக்கு இருந்தால், கருப்பையில் நார்த்திசு கட்டி அல்லது புண் தோன்றி இருக்கலாம். மருத்துவரிடம் சென்று என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவின் போது வலி

உடல் உறவின் போது வலி, புண் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுகிறதா? மாதவிடாய் நிறுத்தம், பிரசவத்திற்கு பிந்தைய நிலை மற்றும் குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதால் பெண்ணுறுப்பில் வறட்சி உண்டாகலாம். இதுவே இதற்கு காரணமாக அமையலாம். கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேறு பல மருந்துகளால் கூட பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படலாம். இது இடுப்பு சம்மந்தப்பட்ட பிரச்சனையாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரை பார்ப்பது நல்லது.

ட்ரெட்மில்லில் ஏப்பம்

உடற்பயிற்சியின் போது உடலின் சர்க்கரையின் மெட்டபாலிசத்தால் இந்த நிலை ஏற்படலாம். சர்க்கரை உடையத் தொடங்குவதால் அளவுக்கு அதிகமான வாயு வெளியேறும், குறிப்பாக, உடற்பயிற்சியின் நடுவே சர்க்கரை கலந்த பானம் குடிக்கும் போது இந்நிலை ஏற்படும்.

அடிக்கடி குதவழி காற்றோட்டம் ஏற்படுதல்

பலர் வயிற்றில் அதிகப்படியான வாயுவை சேர்த்து வைத்திருப்பார்கள். இருப்பினும் இது பொதுவான ஒன்றுதான். அதற்கு காரணம் பலர் இயற்கையாகவே அப்படி தான் பிறந்திருப்பார்கள். ஒரு நாளில் 16 தடவைக்கு கூடுதலாக குதவழி காற்றோட்டம் செய்பவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என ஆய்வுகள் கூறுகிறது. நீங்களும் அதில் ஒரு அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம்.

Related posts

உள்காயம் அறிவது எப்படி?

nathan

சோம்பல் விடுப்போம்… சுறுசுறுப்புடன் வாழ்வோம்.

nathan

ஆரோக்கியமா இருக்க உங்க மூளைய இளமையா வெச்சுக்கோங்க….

nathan

உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அருகம்புல் சாறு…!

nathan

தெரிஞ்சிக்கங்க…தர்மசங்கட நிலைக்கு உள்ளாக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க சில டிப்ஸ்….

nathan

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றும் பழம்… இது கிடைச்சா இனி சாப்பிட்டாம விட்டுறாதீங்க..!

nathan

திருமணத்திற்கு தயாரா?அப்ப உடனே இத படிங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…பெண்களே உங்களுக்கு மாதவிடாயின் முதல் நாளில் மட்டுமே உதிரபோக்கு இருக்கின்றதா?

nathan

எலுமிச்சையும் பூண்டும் கொண்டு இதயத்தை காத்திடுங்கள்!!

nathan