முகப் பராமரிப்பு

மூக்கின் மேல் வரும் கரும்புள்ளிகளைத் தடுக்க சில டிப்ஸ்…

18 1431944226 1 cleanser

கரும்புள்ளிகள் எதற்கு வருகிறது என்று தெரியுமா? சருமத்துளைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அதிக அளவில் சேர்ந்து, சருமத்துளைகள் அடைத்து ஒரு கட்டத்தில் அது கரும்புள்ளிகளாக மாறுகின்றன.

பெரும்பாலும் இந்த பிரச்சனை எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிக அளவில் இருக்கும். ஏனெனில் அவர்களுக்குத் தான் சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் சுரக்கும். அதுமட்டுமின்றி, சருமத்திற்கு மேக்கப் அதிக அளவில் பயன்படுத்தினாலும் இப்பிரச்சனை எழும்.

சரி, இப்போது கரும்புள்ளிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

கிளின்சர்

கெமிக்கல் அதிகம் உள்ள கிளின்சர்கள், சருமத்தில் அளவுக்கு அதிகமான எண்ணெய் பசையை உற்பத்தி செய்யும். இதனால் கரும்புள்ளிகள் அதிகமாகும். எனவே கெமிக்கல் கலந்த கிளின்சர்களை அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்.

சுத்தமான தலையணை

உறை பொதுவாக தலையணையில் அதிக அளவில் இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் இருக்கும். அதுமட்டுமின்றி, தலையில் இருந்து எண்ணெயும் தலையணையால் உறிஞ்சப்படும். எனவே அத்தகைய தலையணை உறையை அடிக்கடி துவைத்து பயன்படுத்த வேண்டும்.

இயற்கையான கிளின்சர்கள்

சருமத்தில் உள்ள அழுக்குள் மற்றும் இறந்த செல்களை நீக்கி, கரும்புள்ளிகள் வராமல் தடுக்க வேண்டுமெனில், இயற்கையான கிளின்சர்களான பால், ரோஸ் வாட்டர், தக்காளி சாறு, உருளைக்கிழங்கு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மேக்கப்

முகத்திற்கு மேக்கப் அதிகம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலும் அழகைக் கெடுக்கும் சரும பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமே மேக்கப் சாதனங்கள் தான்.

ஆவிப்பிடிப்பது

வாரம் ஒருமுறை ஆவி பிடித்து வந்தால், அடைத்திருக்கும் சருமத்துளைகள் விரிவடையும். இதனால் எளிதில் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் நீக்கிவிடலாம்.

Related posts

முகத்தில் உடனடி பொலிவு வேண்டுமா? இரண்டே நிமிடத்தில் !!

nathan

சுருக்கம் வேண்டாம்; பளபளப்பு வேணும்!

nathan

ஏன் உங்களின் கண்ணிமை முடிகள் உதிர்கின்றன? தெரிஞ்சிக்கங்க…

nathan

ஹெர்பல் ஃபேஷியல் facial tips in tamil

nathan

வெறும் 1 மணிநேரத்தில் நிரந்தரமான அழகான புருவம் வேண்டுமா? அழகை மேம்படுத்தலாம்

nathan

கன்னம் குண்டாக வேண்டுமா?

nathan

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

nathan

தக்காளி தரும் தங்க நிறம்!…

nathan

ஈஸியாக வெள்ளை ஆகலாம்! தினமும் இரவில் தூங்கும் முன் இதை செய்திடுங்கள்:

nathan