30.8 C
Chennai
Sunday, May 11, 2025
625.500.560.350.160.300.0 7
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாவு புளித்துவிட்டதா?.. புளிப்பை மட்டும் தனியாக பிரிக்க இதை மட்டுமே செய்யுங்கள்..

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பலான வீடுகளில் ஃப்ரிட்ஜில் நிறைய பொருட்களை அதில் வைத்து வீணாகிக் கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் கருவேப்பிலை, புதினா குறிப்பாக இட்லி மாவு, தோசை மாவு இவை அனைத்தையும் பிரிட்ஜில வெச்சுடுவோம்.

ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டுப் போகக்கூடிய இந்த பொருட்களை எல்லாம், கெட்டுப் போகாமல் எப்படி பயன்படுத்தலாம், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கருவேப்பிலையை ஃப்ரிட்ஜில் வைக்காமல், அதை வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். ஒரு பேப்பரில், கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவிப் போட்டு நன்றாக உலர வைத்து விட்டீர்கள் என்றால், ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் வைக்கும் சாம்பார், குழம்பு, சட்னி தாளிக்க எதுவாக இருந்தாலும் அதில் நான்கு கருவேப்பிலையை எடுத்து கையாலேயே நொறுக்கிப் போட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக இப்படி போடும் கருவேப்பிலையை யாரும் தூக்கி தூர போட மாட்டார்கள்.

இதேபோல் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து, அந்த இலைகளை, காலையில் டீ போடும்போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. காயவைத்த புதினா இலைகள் ஆக இருந்தாலும், கருவேப்பிலை இலைகளாக இருந்தாலும், வருடக்கணக்காக ஆனாலும் கெட்டுப் போகாது.

இதேபோல் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து, அந்த இலைகளை, காலையில் டீ போடும்போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. காயவைத்த புதினா இலைகள் ஆக இருந்தாலும், கருவேப்பிலை இலைகளாக இருந்தாலும், வருடக்கணக்காக ஆனாலும் கெட்டுப் போகாது.

ஒருவேளை மாவு நன்றாக புளித்து விட்டால், பிரிட்ஜில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த மாவில், 1/2 லிட்டர் அளவு மாவு இருந்தால், அதில் 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். ஊற்றிய தண்ணீரை, மாவோடு சேர்த்து நன்றாக கலக்கி விடக்கூடாது. லேசாக கலந்தால் மட்டும் போதும்.

அதன் பின்பு, அந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால், நீங்கள் ஊற்றிய தண்ணீரானது மேலே தெளிந்து வந்திருக்கும்.

அந்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட்டு, மீதமுள்ள மாவை தோசை சுட்டு சாப்பிடலாம். புளிப்பு தன்மை, அந்தத் தண்ணீரிலேயே கீழே போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவை இட்லி ஊற்ற முடியாது தோசைக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

Related posts

உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா பாஸ்தா?

nathan

சுவையான சாதம் கஞ்சி சூப்

nathan

உங்கள் கவனத்துக்கு தூங்குறதுக்கு முன்னாடி வாழைப்பழம் சாப்பிடுறீங்களா?

nathan

தங்கமான விட்டமின்

nathan

எடை குறைப்பு உணவு பட்டியல் – weight loss food chart in tamil

nathan

சூப்பர் டிப்ஸ் ! சளி, இருமல் தொல்லையா… இதமான மைசூர் ரசத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

nathan

முயன்று பாருங்கள்…சத்து மாவு

nathan

பாத்தா ஷாக் ஆவீங்க சத்தானது என நீங்கள் நினைக்கும் உணவுப்பொருட்கள் பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்!

nathan