மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புதிய தாய்மார்கள் செய்யும் 7 பெரிய தவறுகள்!!!

ஒரு தாயாக இருக்க கற்றுக் கொள்வது மிகவும் எளிதான விஷயமல்ல. ஒரு குழந்தையை பெற்றெடுத்த பின்னர் புதிதாக தாயாக மாறுபவர்கள் சாதாரணமாக செய்யும் தவறுகள் பல. இந்த தவறுகள் அவர்களுக்கு சரியான பாடங்களை கொடுத்து தாயாக தயார் செய்வதில் உறுதுணையாக இருந்தாலும், இவ்வாறு தவறுகள் செய்வதை தவிர்ப்பதும் நல்லது தான்.

 

நீங்கள் புதிதாக குழந்தை பெற்றுக் கொண்ட தாயாக இருந்தால், புதிய தாய்மார்கள் செய்யக் கூடிய மிகப்பெரிய தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

 

வேகமாக குணமாக முயற்சி செய்தல்
குழந்தை பிறந்த உடன், தங்களுடைய சாதாரண வாழ்க்கைக்கு மிகவும் வேகமாக திரும்பி விட வேண்டும் என்று காலில் சக்கரம் கட்டிக் கொண்டிருப்பவர்கள் பல பேர். என்னுடைய தங்கையும், உற்ற தோழியும் கூட இந்த தவறுகளை செய்திருக்கிறார்கள். இது மிகவும் சாதாரணமாக செய்யப்படும் இமாலயத் தவறாகும். புதிதாக குழந்தை பெற்றவர்கள் மிகவும் ஆர்வத்துடன் தங்களுடைய காலில் நிற்கவும் மற்றும் பணிகளை செய்யவும் விரும்புவது தான் இந்த தவறுக்கு காரணமாகும். எனவே, நீங்கள் புதிதாக குழந்தை பெற்றவராக இருந்தால், உங்களுடைய உடலுக்குத் தேவையான ஓய்வை அளிக்கத் தவறாதீர்கள்.

குழந்தைகள் விழித்திருக்கும் போது நகம் வெட்டுதல்

எனக்கு முதல் குழந்தை பிறந்த போது இது ஒரு பெரும் தவறு என்று உணராமலேயே செய்தது ‘என்னுடைய குழந்தை விழித்திருந்த போது நகம் வெட்டியது’ தான். என்னுடைய குழந்தை தூங்கும் போது, அவனுடைய நகத்தை வெட்டுவது எளிது என்பதை நான் உணரவில்லை. நீங்கள் ஒரு புதிய அன்னையாக இருந்தால், அங்கே இங்கே என்று கைகளை விசிறிக் கொண்டிருக்கும் செல்லப்பாப்பாவின் விரல் நகங்களை பிடிப்பது எவ்வளவு வேலை தரும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

தங்களை குறைத்து மதிப்பிடுதல்

புதிதாக தாயானவர்கள் தங்களை குறைத்து மதிப்பிடுவது மற்றுமொரு தவறாகும். குழந்தையை பராமரிப்பது மகிவும் கடினமாக விஷயம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு தாயைத் தவிர குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்பவர்கள் யாருமில்லை என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் எதையாவது தவறாக செய்து விட்டு, நான் ஒரு மோசமான தாய் என்று நினைத்து கவலை கொள்ள வேண்டாம். குழந்தையின் மீது அன்பு செலுத்தி, அவர்களை கவனித்துக் கொள்ளும் நீங்கள் மிகவும் நல்ல ‘அம்மா’ தான். உங்களுடைய கணவரைப் போலவே, குழந்தைக்கும் உங்களுடைய நம்பிக்கை மிகவும் தேவைப்படும்.

தந்தையை விட்டு விடுதல்

எனக்கு முதல் குழந்தை பிறந்த போது இந்த தவறை செய்தேன். அதாவது, குழந்தை பிறந்த வேளையில் அவரும் ஒரு பெற்றோர் – தந்தை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. அதனால், ஒரு புதிய அன்னையாக தோற்றம் கொண்டிருந்த நான், அவரும் ஒரு புதிய அப்பா என்பதையும், அவருக்கும் அன்பும், அரவணைப்பும் தரத் தெரியும் என்பதையும் மறந்து விட்டேன். பெரும்பாலான புதிய தாய்மார்கள் செய்யும் பரவலான தவறாக இது உள்ளது. எனினும், இது எளிதில் சரி செய்யக் கூடிய தவறாக உள்ளதால் கவலை வேண்டாம். எனவே, எப்பொழுதெல்லாம் முடிகிறதோ, அப்பொழுதெல்லாம் அவருடைய அரவணைப்பையும், பராமரிப்பையும் குழந்தையின் பேரில் நீங்கள் திருப்பி விடலாம்.

ஒருவரைக் கொண்டு மட்டுமே குழந்தையை ஆற்றுப்படுத்துதல்

புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தங்களுடைய குழந்தையை மற்றவர்களிடம் கொடுத்தும் அமைதிப்படுத்த வேண்டும். குழந்தையை வாரத்திற்கு ஒரு முறை மற்றவர்களிடமும் கொடுத்து ஆற்றுப்படுத்துங்கள், அதன் மூலம் அவன் ஒரே ஆளிடம் இருந்து பழக மாட்டான். ஒரே ஒரு மனிதருடன் மட்டுமே உங்களுடைய குழந்தை அமைதியாக இருந்து பழகி விட்டால், அவர் இல்லாத போது மற்றவர்களிடம் குழந்தையை அமைதியாக இருக்க வைப்பது பெரும்பாடாகி விடும். எனவே, இந்த தவறை எப்பாடுபட்டேனும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அவர்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்

புதிதாக குழந்தை பெற்றவர்களின் மனதில் நிறைய கேள்விகள் இருந்தாலும், அவர்கள் அவற்றை வெளியே கேட்க மாட்டார்கள். இந்த கேள்விகள் அறிவுக்கு ஒப்பாதவை என்று நினைத்துக் கொண்டு, நல்ல கேள்விகளையும் கூட அவர்கள் கேட்க மாட்டார்கள். இந்த கேள்வியைத் தான் உங்களுடைய குழந்தையின் மருத்துவர் கேட்பார். எனவே, அவர்களிடம் உங்களுடைய கேள்விகளை கேளுங்கள். இந்த கேள்விகள் நீங்கள் புதிய குழந்தையை கவனிக்க, குழந்தை பிறப்பிலிருந்து மீண்டு வரவும் உதவும்.

உதவி கேட்க பயமா?

நீங்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது, சிற்சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். நிறைய தாய்மார்கள் இந்த விஷயத்தில் உதவி கேட்க வெட்கப்படுவார்கள். தாய்ப்பால் என்பது இயற்கையாகவே வர வேண்டும் என்றும், இதில் தவறு நிகழ்ந்து விட்டால் வருத்தப்படுவதும் அவர்களுடைய தவறாக இருக்கும். ஆரம்பத்தில், எல்லா தாய்மார்களுக்கும் எளிதாக தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. இந்த விஷயத்தில் உங்களுக்கு நிறைய உதவிகள் தேவைப்படும் என்பதால், உதவி கேட்க பயப்பட வேண்டாம்.8 mother baby

குறிப்பு

மிகவும் சரியான தாய் என்று சொல்லக் கூடியவர்கள் யாருமில்லை என்றாலும், நல்ல தாய் என்று பெயரெடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. எனவே, மேற்கண்ட பொதுவான தவறுகளை களைந்து, பிற தவறுகளையும் தவிர்த்து நல்ல தாய் என்று பெயரெடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புதிய தாயாராக இருந்தால், என்ன மாதிரியான தவறுகளை செய்திருப்பீர்கள் என்பதை எங்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button