மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…அதிகாலை எழுந்ததும் வாயில் இந்த எண்ணெயை விட்டு கொப்பளித்தால் என்ன நடக்கும்?

காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்கு முன் வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி அதாவது 10 மி .லி எடுத்து வாயில் ஊற்றி பல் இடுக்குகளில் ஊடுருவும்படி நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

சுமார் 15 நிமிடம் வரை உள்ளுக்குள்ளேயே கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எண்ணெய் நுரைத்து வெண்மை நிறமாக மாறும்.

அச்சமயத்தில் வாயில் இருந்து வெளியில் துப்பிவிட வேண்டும். துப்பும் எண்ணெய் நுரைத்து வெண்மை நிறமாக இல்லாமல் மஞ்சள் நிறமாகவே இருந்தால் நீங்கள் சரியாக கொப்பளிக்கவில்லை என்று அர்த்தம்.

மீண்டும் வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால் நம் உடம்பிற்கு கெட்டதை விளைவிக்கக்கூடிய கிருமிகள் இந்த உமிழ்நீர் வழியே வெளியேறிவிடும்.

கொப்பளித்து முடித்துவிட்டு வழக்கம்போல் பல் தேய்க்கலாம். இந்த முறையை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் செய்தால் முழுப்பலன் கிடைக்கும்.

இதை யார் வேண்டுமானாலும் அதாவது ஏதோ ஒரு நோய்க்காக மாத்திரை சாப்பிடுபவர்களும் செய்யலாம். சில பேர் வாய் கொப்பளிக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவார்கள்.

ஆனால் தேங்காய் எண்ணெயை விட நல்லெண்ணெயே சிறந்தது. இந்த முறையை தினமும் செய்யலாம். செய்ய முடியாதவர்கள் வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

நன்மைகள்

  • நல்லெண்ணெய் பல் இடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ,வாய் துர்நாற்றத்தை போக்கும்.
  • பற்களில் உள்ள கரைகளை நீக்குகிறது.
  • பல் கூச்சம் ,ஈறுகளில் இரத்த கசிவு ,பல்வலி அனைத்தும் மறையும்.
  • கை ,கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
  • முகப்பொலிவு ஏற்பட்டு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்போம்.
  • ஒற்றை தலைவலி,தொண்டை வலி நீங்கும்.
  • முகத்தசைகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கிறது.
  • குரல் வளத்தை மேம்படுத்தும்.

Related posts

மாதவிலக்கு பிரச்னையை போக்கும் கழற்சிக்காய்

nathan

பெண்களின் திறமையை தடுக்கும் பயமும்.. கூச்சமும்..

nathan

சளியை விரட்டும் துளசி

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: