முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க… போட்டோவில் பளிச்சென்று தெரிய இந்த மேக்கப் டிப்ஸை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!

நிறைய பெண்கள் போட்டோ எடுக்கும் முன், போட்டோவில் பளிச்சென்றும் அழகாகவும் தெரிய மேக்கப் போடுவார்கள். அப்படி மேக்கப் போடும் பெண்கள் தவறான மேக்கப்பை போட்டு, பின் போட்டோவில் பூதம் போன்று காணப்படுவார்கள். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை போட்டோவில் அழகாக தெரிய ஒருசில மேக்கப் டிப்ஸ்களை கொடுத்துள்ளது.

அந்த மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் போட்டோவில் அழகாகவும் பளிச்சென்றும் காணப்படுவீர்கள். சரி, இப்போது அந்த மேக்கப் டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

பிரைமர்

போட்டோவிற்கு போஸ் கொடுக்க மேக்கப் போடும் போது, தவறாமல் சரும நிறத்திற்கு ஏற்றவாறான பிரைமரை தேர்ந்தெடுத்து தடவ வேண்டும். அப்படி சரியான பிரைமரை தேர்ந்தெடுத்து தடவினால், அதற்கு மேல் போடப்படும் மேக்கப்பானது சரியாக இருக்கும்.

ஃபவுண்டேஷன்

ஃபவுண்டேஷன் வாங்கும் முன், அதனை ட்ரையல் செய்து பார்க்க வேண்டும். அப்படி ட்ரையல் பார்க்கும் போது, தவறாமல் செல்பீ எடுத்துப் பாருங்கள். இதன் மூலம் எந்த ஃபவுண்டேஷன் உங்களுக்கு பொருத்தமாக உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.

சன்ஸ்க்ரீன்

சன்ஸ்க்ரீனானது போட்டோ எடுக்கும் போது பளிசென்று வெளிக்காட்டும். அதிலும் சன்ஸ்க்ரீன் வாங்கும் போது, டைட்டானியம் டை ஆக்ஸைடு இல்லாததை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.

கண்களுக்கான மேக்கப்

போட்டோ எடுக்கும் போது அழகாக வெளிப்பட வேண்டுமென்று பலர் கண்களுக்கு அதிக மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி கண்களுக்கு மேக்கப் போட்டால், உதடுகளில் போட்டும் லிப்ஸ்டிக்கின் அளவை குறைக்க வேண்டும்.

அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்தவும்

போட்டோ எடுக்கும் போது கண்களுக்கு அளவாக மேக்கப் போட்டிருந்தால், உதடுகளுக்கு நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, எப்போதுமே உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் நல்ல அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.

லிப் கிளாஸ்

இன்னும் உதடுகள் நன்கு அழகாக வெளிப்பட வேண்டுமானால், உதடுகளுக்கு மின்னும் லிப் கிளாஸ் போட வேண்டும். இதனால் இளமையான மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெறலாம்.

Related posts

கருவளையம் சீக்கிரம் மறைய என்ன செய்யலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா மாம்பழத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்கள் முதல் சுருக்கங்கள் வரை சரி செய்வது எப்படி..?

nathan

முகம் சிவப்பு நிறம் பெற தினமும் இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

Leave a Comment

Live Updates COVID-19 CASES
%d bloggers like this: