ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…புரோட்டா பிரியரா? அப்போ இந்த பிரச்சினை உங்களுக்கு வரலாம்? அறிவியல் விளக்கம்

பரோட்டா, வீச்சு, சிக்கன் பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, முட்டை வீச்சு என்றாலே ஒரு பக்கம் சுவையும் மற்றொரு பரோட்டா தீமையானதே என அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் நம் அன்றாட வாழ்வில் பரோட்டா தவிர்க்கமுடியாத உணவாக மாறிவிட்டது இதற்கு காரணம் அதன் சுவையும், மலிவான விலையும், கணவன் மனைவிபோல் புரோட்டா குருமா கைப்பக்குவமும் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் நான்கு பரோட்டா சாப்பிட்டால் பசியை போக்கி ஒரு நாள் முழுவதும் வேலை செய்யக் கூடிய சக்தியை தருகின்றது.

அவ்வளவு சக்தியை தந்தால் அதை சாப்பிட வேண்டியதுதானே என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் பரோட்டா சாப்பிடக் கூடாது ஆபத்தானது என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

அதில் உள்ள அறிவியல் குறித்து இங்கே பார்ப்போம்.

மைதா கோதுமையில் தயாரிக்கப்படுகிறது.கோதுமை மூன்று பாகங்கள் உள்ளது, Bran(தவிடு), Germ, Endosperm(வித்தகவிழையம்), எனப்படும்.

“Bran” யில் அதிகமான நார்ப்பொருள்(Fiber), B வைட்டமின், Minerals உள்ளது.”Germ” யில் Carbohydrate எனப்படும் மாவுசத்து, digestable Protein(செரிமான புரத சக்தி), Fat(கொழுப்பு) உள்ளன .

“Endosperm” யில் starch( மாச்சத்து), Gluten எனப்படும் protein(புரத சத்து ) உள்ளது. Gluten (குளுடேன் ) செரிமானம் ஆக அதிக நேரம் ஆகும். Bran(தவிடு ),Germ ஆகியவற்றை நீக்கி விட்டு endosperm(வித்தகவிழையம்) இருந்து மைதா தயாரிக்கப்படுகின்றது.

Bran விலங்குகளுக்கு உணவாகவும், எண்ணெய் எடுக்கவும் பயன்படுகின்றது. Germ எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

பஞ்சு புரோட்டா இழுத்து பார்த்தால் பஞ்சைப்(elastic) போல் விரியும், அதற்கு காரணம் மைதாவில் உள்ள புரோட்டீன்(Gluten). Bran, Germயில் ப்ரோடீன் அதிகளவில் உள்ளன.625.0.560.350.160.300.05

ஆனால் அது பஞ்சை போல் விரியும்(gluten) தன்மை இல்லை, மேலும் இதில் உள்ள ப்ரோடீன் சீக்கரம் செரிமானம் ஆகிவிடும்.

Bran மாவுவில் புரோட்டா செய்தால் பஞ்சு போல் விரியும் தன்மை கிடைக்காது. அதனால புரோட்டா இதில் செய்வதில்லை.

ஆனால் bran, germ மாவு சிறிய அளவு மைதாயுடன் கலந்து புரோட்டா செய்து சாப்பிடலாம்.

மைதாவில் உள்ள குளுடேன்(Gluten) ப்ரோடீன் மிகவும் சிக்கலான வடியும் கொண்டது. இதனால் பரோட்டா செரிமானமாக நீண்ட நேரம் ஆகும்.

மேலும் அதனால மைதா(பரோட்டா ) உட்கொள்ளும் பொழுது செரிமான சிக்கல்(Gluten intolerence) ஏற்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button