முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருவளையங்களைப் போக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

கருவளையம் என்பது அழகைக் கெடுக்கும் ஒன்று. இந்த கருவளையமானது நாம் மேற்கொள்ளும் செயல்களினால் ஏற்படும். குறிப்பாக போதிய தூக்கமின்மை, அதிகப்படியான மன அழுத்தத்திற்கு ஆளாவது, நீண்ட நேரம் அழுவது, எப்போதும் கம்ப்யூட்டர் முன் இருப்பது என்று பல காரணங்களால் ஏற்படும்.

இந்த கருவளையத்தைப் போக்க பலர் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றால் கருவளையம் நீங்குகிறதோ இல்லையோ, சருமத்தில் பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்துவிடுகிறது.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, கண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்க ஒருசில எளிமையான இயற்கை வழிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

தக்காளி

கருவளையத்தைப் போக்க தக்காளி மிகவும் சிறப்பான பொருள். அதற்கு 1 டீஸ்பூன் தக்காளி சாற்றில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருவளையத்தை எளிதில் போக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் 15 நிமிடம் வைத்தால், அது கண்களில் உள்ள சோர்வை போக்குவதுடன், கருவளையங்களை போக்கிவிடும். வேண்டுமானால் வெள்ளரி சாற்றுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதனையும் கருவளையங்களைப் போக்க பயன்படுத்தலாம்.

ரோஸ் வாட்டர்

காட்டனை ரோஸ் வாட்டரின் நனைத்து, கண்களின் மேல் சிறிது நேரம் வைக்கலாம். இல்லாவிட்டால், ரோஜா இதழ்களை பால் சேர்த்து அரைத்து, அதனை கருவளையம் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவலாம்.

உருளைக்கிழங்கு

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றிற்கு கருவளையத்தைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டியோ அல்லது அதன் சாற்றினை கருவளையம் உள்ள இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்தால், கருவளையம் மறையும்.

பாதாம் எண்ணெய்

தினமும் பாதாம் எண்ணெய் கொண்டு கண்களை மசாஜ் செய்து வந்தால், கருவளையம் வருவதைத் தடுக்கலாம்.

குளிர்ந்த டீ பேக்

டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, அதனை கண்களின் மேல் வைத்தால், கருவளையம் மறைந்துவிடும்.

புதினா இலைகள்

புதினா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது தக்காளி சாறு சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கண்களைச் சுற்றியுள்ள கருமையானது நீங்கிவிடும்.

வைட்டமின் ஈ எண்ணெய்

வைட்டமின் ஈ நிறைந்த எண்ணெய்களான ஆலிவ் ஆயில், அவகேடோ ஆயில் அல்லது பாதாம் ஆயில் கொண்டு தினமும் கண்களை மசாஜ் செய்து வந்தால், கருவளையம் மறையும்.

குளிர்ந்த பால்

தினமும் காட்டனில் நல்ல குளிர்ச்சியான பாலை நனைத்து, கண்களின் மேல் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், கருவளையங்கள் நீங்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழத்தினை சாறு எடுத்து, அதில் சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்களின் மேல் தடவி ஊற வைத்து கழுவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் பேஸ்ட்

மஞ்சள் தூளை அன்னாசி பழச்சாறு சேர்த்து கலந்து, கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் விரைவில் கருவளையம் மறையும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதனை கண்களுக்கு மேல் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், நிச்சயம் கருவளையத்தைப் போக்கலாம்.

குளிர்ந்த ஸ்பூன்

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஃப்ரிட்ஜில் வைத்த ஸ்பூனை கண்களின் மேல் குளிர்ச்சி நீங்கும் வரை வைத்தாலும் கருவளையம் மறையும்.

அவகேடோ

தினமும் அவகேடோ பழத்தை துண்டுகளாக்கி, அதனை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்து எடுத்தாலும், கருவளையமானது போய்விடும்.

பவளமல்லிப் பூ

பவளமல்லிப் பூவை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை கண்களைச் சுற்றி தடவி ஊற வைத்து கழுவினால், கருவளையம் நீங்கும்.

விளக்கெண்ணெய்

1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில், 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, கண்களுக்கு தடவி வந்தால், கண்கள் பொலிவோடு இருக்கும்.

சோள மாவு

சோள மாவு மற்றும் தயிரை சரிசமமாக எடுத்து கலந்து, அதனை கருவளையம் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.

பாதாம்

பாதாமை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை கண்களைச் சுற்றி தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், கருவளையம் மறையும்.

நல்ல தூக்கம்

முக்கியமாக இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகளை கண்டறிந்து, அவற்றைப் பின்பற்றினால் கருவளையம் வருவதைத் தடுக்கலாம்.

யோகா அல்லது தியானம்

மேற்கூறியவற்றை மட்டும் மேற்கொண்டால் போதாது, அத்துடன் தினமும் யோகா அல்லது தியானத்தை செய்து வந்தால், உடலானது ரிலாக்ஸ் அடைந்து, கருவளையம் மட்டுமின்றி வேறு எந்த ஒரு சரும பிரச்சனைகளும் வராமல் இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button