ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…பெண் காலின் இரண்டாவது விரல் கட்டைவிரலை விட பெரிதாக இருந்தால் என்ன பலன்?…

ஒரு மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரை இந்த மண்ணில் ஆற்ற வேண்டிய நற்செயல்கள், ஆற்றக்கூடாத ஒழக்க கேடுகள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளது.

இந்து கோட்பாட்டில் பல்வேறு சாஸ்திரங்கள் இருந்தாலும், இதில் முக்கியமானது சாமுத்திரிகா சாஸ்த்திரம். ஏனெனில் இந்த சாஸ்திரம் தான் ஆண் பெண் உறவுகளுக்குடையே ஏற்படும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள், மனிதர்களின் உடலில் இருக்கும் மச்சங்களை பொறுத்து அவர்களின் வாழ்வியல் முன்னேற்றம் போன்றவற்றை விளக்குகிறது.

இதில் ஒன்றுதான் பெண்களின் பாதங்கள். அதாவது மனைவியின் பாதம் எவ்வாறு இருக்கிறதோ, அதனைப்பொறுத்தே கணவனின் வாழ்க்கை சிறப்பாக இருக்குமா? இருக்காது? என்பதை கூறிவிட முடியும் என்கிறது சாமுத்திரிகா சாஸ்திரம்.

ஐந்து நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள, கால்களின் ஐந்து விரல்கள்
  1. கட்டை விரல் – அங்குஷ்தா
  2. இரண்டாம் விரல் – தர்ஜானி
  3. நடுவிரல் – மத்யமா
  4. நான்காம் விரல் – அனாமிகா
  5. சுண்டுவிரல் – கணிஷ்திகா

ஒரு பெண், சக்ரா, த்வாஜா, ஸ்வஸ்திகா போன்ற குறிகளை தனது பாதத்தில் உள்ளடக்கி வைத்துள்ளார். இதை வைத்து அவரது கணவனின் தலைவிதியை அறிய முடியும்.

  • பெண்ணின் இரண்டாம் கட்டை விரலை விட பெரியதாக இருந்தால், அப்பெண் கணவனுக்கு அடங்கமாட்டாள். அவர் சொல்வது எதையும் கேட்காமல் தனக்கு தானே முடிவு எடுத்துக்கொள்வதால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையின் காரணமாக கணவனின் நிம்மதி பாதிக்கப்படும்.
  • கால்விரல்கள் அனைத்தும் மலைபோன்று பெரிய தோற்றதில் இருந்தால், மலையின் பாரத்தை போன்றே, அனைத்து சுமைகளையும் தாங்கி, கணவனின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பாள். மேலும், நல்ல குணம் படைத்தவளாக இருப்பாள்.
  • பெண்கள் நடக்கும்போது, அவர்களின் நான்காம் விரலும், சுண்டுவிரலும் பூமியில் படாமல் இருந்தால், அவர்கள் கணவன் மீது நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்வில் சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
  • மேலும், நான்காம் விரலும், சுண்டு விரலும் அளவில் ஒரே மாதிரியாக இருந்தால், கணவருக்கு தொழில் நஷ்டம் உண்டாகும்.
  • அனைத்து விரல்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருந்தால், இவர்கள் பண விடயத்தில் ஊதாரியாக இருப்பார்கள். கட்டுக்கடங்காமல் செலவுகளை செய்வார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button