தலைமுடி சிகிச்சை

ஆண்களுக்கு 20 வயதிலேயே தலை சொட்டையாவதற்கான காரணங்கள்!

09 1423455400 1 baldhead

இன்றைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை ஏற்படுகிறது. அதிலும் ஆண்களுக்கு தான் 20 வயதானாலேயே முடி உதிர்வது அதிகரித்து, தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கும். இப்படி வழுக்கை விழ ஆரம்பிப்பதால், தற்போது பல ஆண்களும் திருமணம் என்று வரும் போது பிரச்சனை ஏதும் நேராமல் இருக்க, தங்களின் முடிக்கு அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

சரி, என்ன தான் முடிக்கு பல பராமரிப்புக்களைக் கொடுத்தாலும், வழுக்கை எதனால் ஏற்படுகிறது என்று ஒவ்வொருவரும் காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? ஆகவே இங்கு  ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.

பரம்பரை

வழுக்கை ஏற்படுவதற்கு பரம்பரரையும் ஒரு காரணம். அதிலும் இன்றைய உலகில் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால், முடி உதிர்வது அதிகரிப்பதுடன், அவ்விடத்தில் முடி வளராமல் வழுக்கை ஏற்படுகிறது. மேலும் இந்த நிலை ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் நேரிடுகிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகரிப்பதால், எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் வழுக்கை. மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்படுவதால், மன அழுத்தத்தை தூண்டும் சில காரணிகள், வழுக்கை தலைக்கு உள்ளாக்குகிறது என்று முடி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மோசமான உணவுப்பழக்கம்

மோசமான உணவுப்பழக்கத்தினால், உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது. அதில் குறிப்பாக புரோட்டீன், கரோட்டின், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவற்றில் குறைபாடு ஏற்பட்டு, இதனால் மயிர் கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் முடி உதிர்வது அதிகரித்து, நாளடைவில் வழுக்கைக்கு வழிவகுக்கிறது. ஆகவே இன்றயை காலத்தில் அன்றாடம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவதுடன், நல்ல சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

ஹார்மோன் மாற்றங்கள்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் குறிப்பிட்ட மருந்துகள் அல்லது நோய்களால், ஆண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. இப்படி ஆண்களின் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது, முடி உதிர்தலை அதிகரிக்கும் டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோனின் ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து, பின் அவ்விடத்தில் வழுக்கையை உண்டாக்கிவிடும்.

புகைப்பிடிப்பது

மயிர்கால்களின் ஆரோக்கியத்திற்கு ஆக்ஸிஜன் மிகவும் முக்கியம். இத்தகைய ஆக்ஸிஜன் இரத்தத்தின் மூலம் தான் மயிர்கால்களுக்கு கிடைக்கும். ஆனால் புகைப்பிடிப்பதால், இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவு குறைவதோடு, இரத்த ஓட்டத்தின் சுழற்சியும் குறைந்து, புகைப்பதன் மூலம் உள்ளே நுகரப்படும் கார்பன் மோனாக்ஸைடு முடியை ஆரோக்கியமற்றதாக மாற்றி, மயிர்கால்களையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, புகைப்பிடிப்பதன் மூலம் இரத்தத்தில் நிக்கோட்டின் அதிகம் கலந்து, முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல், அதனாலும் முடி உதிர்வது அதிகரிக்கும். இத்தகைய நிலை ஏற்பட்டால், மயிர்கால்கள் வலுவிழப்பதுடன், சக்தியை முற்றிலும் இழந்து வழுக்கைக்கு வழிவகுத்துவிடும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்

நல்ல ஊட்டச்சத்துக்களான புரோட்டீன், வைட்டமின் பி3, பி5, பி9 மற்றும் ஈ, ஜிங்க், இரும்புச்சத்து, மக்னீசியம் ஆகியவை நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

நல்ல தூக்கம்

தினமும் இரவில் 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 1 டம்ளர் தண்ணீரை மறக்காமல் குடிக்க வேண்டும். இதனால் மயிர்கால்கள் வறட்சியடையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

முடி வளர்ச்சியைத் தூண்டும் உணவுகள்

பால், பாதாம், பசலைக்கீரை, ப்ராக்கோலி, ஆரஞ்சு, நவதானியங்கள், மீன், சோயா பீன்ஸ், முட்டை, கீரைகள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் முடி நன்கு வளர்ச்சி அடையும்.

க்ரீன் டீ

தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வந்தால், முடி உதிர்தலைத் தூண்டும் டிஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் தூண்டுதல் தடுக்கப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button