ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா வெட்டிவேரை வீட்டின் கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக காட்டினால் கிடைக்கும் பலன்கள்!

வெட்டிவேர் என்பது பெரு பழமையான மூலிகை பொருளாகும். பலரும் இந்த பேரை கேள்விப்பட்டிருப்பர். இது நாட்டு மருந்தாக பயன்படக்கூடியது. வாசனை திரவியங்கள் செய்யவும், உணவு மற்றும் சில பானங்கள் செய்யும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வாசம் மிகவும் அருமையாக இருக்கும். “வெட்டிவேரு வாசம் வெடல புள்ள நேசம்” என்ற பாடல் வரிகள் புகழ் பெற்றது. இதன்மூலம் வெட்டிவேரின் வாசத்தை பற்றி அறியலாம்.

இது மிகுந்த குளிச்சியை தரும். மண்வீடுகளில் கூரையாக கூட இதனை பயன்படுத்துவர். மெத்தைகளில் திணிப்பாக இதனை பயன் படுத்தலாம்.கதவுகளிலும், ஜன்னல்களிலும் திரைகளாக பயன்படுத்தலாம்.

இதன்மூலம் அந்த இடம் குளிர்ச்சியை அடைகிறது. இதன் நறுமணம் அந்த இடத்தை ஆக்கிரமிக்கும். இதனால் பூச்சிகள் அந்த இடத்தில் இருக்காது. இந்த பலன்களுக்காகவே வெயில் அதிகமாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் இதனை அதிகமாக பயன்படுத்துவர்.

வெட்டிவேரை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிப்பதன் மூலம் உடல் சூடு குறைகிறது. உடலில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மை அடைகிறது. சருமம் பாதுகாக்கப்படுகிறது.

வீக்கத்தை குறைக்கிறது:

இதன் மென்மை மற்றும் குளிர்ச்சியான தன்மை, உடலின் வீக்கத்தை குறைக்கிறது. நரம்பு மண்டலம் மற்றும் சுழற்சி மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பக்கவாதம், வயிற்றுப்போக்கு போன்றவற்றால் ஏற்படும் அழற்சிக்கு இது ஒரு சிறந்த சிகிச்சை பொருளாகும்.

வடுக்கள் மறைகிறது:

வெட்டிவேரில் இருக்கும் சிக்காட்ரிஷன்ட் என்னும் ஏஜென்ட் உடலில் வடுக்கள் மறைவதை துரிதப்படுத்துகிறது. வடுக்கள் ஏற்பட்ட இடத்தில் புதிய திசுக்கள் வளர்ந்து இறந்த திசுக்களை மாற்றி அமைகிறது.

உடலின் எல்லா இடங்களும் ஒரே சீராக இருக்க செய்கிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு வயிற்றில் ஏற்படும் வரி தழும்புகள் , கொழுப்பு பிளவுகள் , அம்மைக்கு பிறகு ஏற்படும் தழும்புகள், தீக்காயங்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

கிருமி நாசினி:

இந்தியா போன்ற வெப்ப மயமான நாடுகளில், பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் . அவைகள் அதிகமான சூட்டில் பெருகி வளர்கின்றன. ஆகையால் , காயங்கள் ஏற்படும் போது இந்த நுண் கிருமிகள் அவற்றுள் நுழைந்து ஆறவிடாமல் செய்கின்றன.

இதற்கான தீர்வு தான் இந்த வெட்டிவேர் எண்ணெய் . இந்த எண்ணையை காயங்களில் தடவுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் நுண் கிருமிகளை செயலிழக்க செய்கின்றன. இந்த எண்ணெய் வெளியுறுப்புகள் மற்றும் உள்ளுறுப்புகள் இரண்டிலும் காயங்களை குணமாக்குகின்றன.

வெட்டிவேர் டானிக்:

ஒரு வாகனத்தை ஓவராயில் செய்து பழுது பார்ப்பதை போல் தான் உடலுக்கு இந்த டானிக் கொடுப்பது ஆகும். வெட்டிவேர் டானிக் உடலின் எல்லா செயல்பாடுகளையும் சீரமைக்கிறது. செரிமானம், சுவாசம்,நோயெதிர்ப்பு,நரம்பு, நாளமில்லா சுரப்பி, போன்ற எல்லா உறுப்புகளையும் சரிபடுத்துகிறது.

இந்த டானிக் உடலை சீர்படுத்தி, புத்துணர்ச்சி அடைய செய்கிறது. உடலுக்கு சக்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

சாந்தமாக்கும்:

இது நரம்பு எரிச்சல், துன்பங்கள், கொந்தளிப்புகள் மற்றும் கோபம், பதட்டம், வலிப்பு நோய் மற்றும் வெறித்தனமான தாக்குதல்கள், அமைதியற்ற தன்மை, மற்றும் பதட்டம் போன்ற உணர்ச்சி வெடிப்புகளை கட்டுப்படுத்தி சாந்தமாக்கும். இது தூக்கமின்மையால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்குப் பயன் அளிக்கிறது.

சரும சேதத்தை தடுக்கிறது:

பாக்டீரியாக்களால் ஏற்படும் சரும தொந்தரவுகளை போக்கி, வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டுகள் வளச்சியை அதிகரிக்கிறது. இதனால் சருமம் பளபளப்பாக இருக்கிறது.

மற்ற பலன்கள் :

வாத நோய், கீல்வாதம், தசை வலி , சரும வறட்சி மற்றும் சரும வெடிப்பு போன்றவற்றையும் தடுப்பதற்கு வெட்டிவேர் எண்ணெய் உதவுகிறது. பென்சாயின், மல்லிகை, லாவெண்டர் போன்ற வகை எண்ணெய்களுடன் இதனை கலந்தும் பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button