முகப் பராமரிப்பு

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது?

a36e5774 2b2b 4478 b633 b273afc45cb8 S secvpf

உடல் மேம்பட பெண்களின் முகத்தில் மெல்லிய முடிகள் இருக்கும். இது இயற்கையான இன்றுதான். ஆனால் சில பெண்களுக்கு ஆண்களைப் போல் மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்ந்திருக்கும். உண்மையில் இது உடலில் உள்ளே ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறி.

“ஆண்கள்போல் பெண்களுக்கு இப்படி மேல் தாடையிலும் கீழ் தாடையிலும் கன்னத்திலும் முடி வளர்வதை ஹிருசிட்டிசம் என்போம். இந்த பிரச்சனைக்கான காரணங்கள் ஆண்களுக்குரிய ஆன்ட்ரஜன் பெண்களின் உடலில் அதிகமாக இருந்தால் இந்தப் பிரச்சனை வருகிறது. சில பெண்களுக்கு சினைப்பையில் கட்டிகள் வரும்போது ஆண்களுக்குரிய ஹார்மோனான ஆன்ட்ரஜன் கூடுதலாக சுரக்கும். இதுவே பெண்களுக்கு ஆண்களைப்போல் முடி வளர்வதற்கு காரணமாகிறது.

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள் உடலில் ஹார்மோன் அளவை கண்டுபிடித்து அதை சரிசெய்ய வேண்டும். சினைப் பையில் கட்டிகள் இருந்தால் அதற்குரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் முகத்தில் அடர்த்தியாக வளர்ந்த முடிகளை லேசர் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். லேசர் சிகிச்சையில் டையோடு லேசர் மற்றும் ஐ.பி.எல் லேசர் என இருவகையான சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் டையோடு முறைதான் சிறந்தது. லேசர் சிகிச்சையை மாதம் ஒருமுறை என 5 மாதம் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு வருடம் ஒருமுறை செய்ய வேண்டும். லேசர் சிகிச்சையால் முடியின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் நூறு சதவீதம் அகற்ற முடியாது.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button