Other News

பெண்களே தெரிஞ்சிக்கங்க…விளக்கு வைத்த பின் பெண்கள் ஏன் வெளியே போக கூடாது தெரியுமா? மீறி சென்றால் என்ன நடக்கும்?

விளக்கு வைக்கும்போது விளக்கில் நிறைவான எண்ணெய் இருக்கிறதா,நீளமான திரி இருக்கிறதா என்பதை கவனித்து விளக்கேற்றவேண்டும்.

விளக்கு குறைந்தது 1 மணிநேரமாவது கட்டாயம் எறியவேண்டும்.

அனைவரது வீட்டிலும் கட்டாயம் விளக்கு ஏற்றவேண்டும். மாலை நேரத்தில் குடும்ப பெண்கள் மற்றும் குழந்தைகள் விளக்கு வைத்து கை கோர்த்து இறைவனை வணங்கினால் பெண்களின் முகம் அழகாகவும்,கலையாகவும்,தெய்வீகம் நிறைந்ததாகவும் இருக்கும்.

குடும்பத்தலைவி எக்காரணம் கொண்டும் விளக்கு வைத்த பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.

மாலை நேரத்தில் விளக்கு வைத்த பிறகு மஹாலக்ஷ்மி தாயார் அவர்களும்,தேவர்களும்,உப தேவதைகளும் நம்மை ஆசிர்வதிக்க நம் இல்லம் தேடி வருவார்கள் என்பது ஐதீகம்.

ஆகவே அந்நேரத்தில் குடும்பபெண்கள் வீட்டில் இருக்கவேண்டியது அவசியம். விளக்கேற்றும்போது பின்கதவை மூடி முன் கதவை திறந்த பின் விளக்கேற்றவேண்டும்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விளக்கு எறியக்கூடாது.
அவசர வேலையாக இருந்தாலும் விளக்கேற்றி அரைமணிநேரம் கழித்து வீட்டைவிட்டு வெளியே செல்லலாம்.

விளக்கு எண்ணெய் தீர்ந்தோ,திரி கருகியோ தானாக அணையக்கூடாது. விளக்கை பூவின் காம்பு பகுதி,விரலி மஞ்சள்,குண்டு மஞ்சள் கொண்டு விளக்கை அணைக்கவேண்டும்.

கைக்கொண்டு விளக்கை அணைக்கக்கூடாது. அலுவலகம் செல்லும் பெண்களாக இருந்தாலும் அலுவலகம் விட்டு வீடு திரும்பியதும் முகம் கழுவிக்கொண்டு விளக்கு ஏற்ற வேண்டியது அவசியமான ஒன்று.

வீட்டில் வயாதானவர்களோ அல்லது உடம்பு சரியில்லதவர்களோ தூங்கிக்கொண்டிருந்தாலும் விளக்கு ஏற்றலாம்.

வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி இறைவனை வணங்கி வந்தால் அந்த இல்லம் செல்வம் நிறைந்து, ஆனந்தம் பெருகி,இருள் நீங்கி, சௌபாக்கியம் நிறைந்த வீடாக மாறும்.

Related posts

வைரலாகும் காமெடி நடிகர் விவேக்கின் வீடியோ ! “உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கிறது என்று தெரியாது”

nathan

அடேங்கப்பா! இந்தியாவிலேயே மிகப் பெரிய பணக்காரப் பெண் இவர் தான்.

nathan

அடேங்கப்பா! நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகை அக்ஷரா ஹாசன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

nathan