26.8 C
Chennai
Wednesday, Jan 15, 2025
cats 385
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…வாரத்துக்கு ஒருநாள் இந்த மீனை சாப்பிடுங்க.. உங்களுக்கு எந்த நோயும் எட்டிப் பார்க்காது..!

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்!

அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி, மத்தி மீனில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன.

இதில் சுவையும், ஆரோக்கியமும் கூடுதலாகும். நெத்திலி மீனில் பாலி அன் சாச்சுரேட்டட்பேட்டி அமிலம் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும் துணை செய்யும்.

பேட்டி ஆசிட், வைட்டமின் ஈ, செலினியம் போன்றவை நெத்திலி மீனில் இருப்பதால் இது சரும பிரச்னைகளை தீர்க்கும். நெத்திலியில் உள்ள கால்சியம், வைட்டமின் ஏ பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்தும். இதேபோல் வாரத்துக்கு ஒருமுறையேனும் நெத்திலி மீனைச் சாப்பிட்டால் கண்பிரச்னையையும் தீர்க்கலாம். இது உடல் எடை குறைப்புக்கும் கைகொடுக்கும்.

இதேபோல் பொதுவாகவே மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம். இது குழந்தைகளின் மூளைவளர்ச்சிக்கும், நல்ல பார்வைக்கும் உதவும். அறிவாற்றல் அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையும் இதில் கூடும். இதேபோல் மீன்களில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் புற்றுநோய் வரும் வாய்ப்பையும் பாதியாக குறைக்கும்.

தொடர்ந்து குழந்தைகளுக்கு மீன் உணவைக் கொடுத்துவர, ஆஸ்துமா பாதிப்பில் இருந்தும் மீளலாம். இது எல்லாம் நெத்திலியில் நமக்கு கிடைக்கும் நன்மைகள். இனி மத்தி மீனைப் பார்ப்போம்.

இதில் உள்ள வைட்டமின் டி பல்வேறு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கும். இதேபோல் மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது தோல்வியாதிகள், நரம்பு, மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், வயோதிகர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகியவற்றையும் குறைக்கும்.

நெத்திலி, மத்தி மீன்கள் பெரிய விலையெல்லாம் இல்லை. இவை சராசரி மீன்களை விட விலையும் கம்மி தான். இனி வாரத்துக்கு ஒருமுறை இந்த மீன்களை உணவில் சேருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்யுங்கள்..

Related posts

உங்க இதயத்திற்கு ஆரோக்கியம் தரும் சிவப்பு நிற பழங்கள்..இவ்வளவு நன்மைகளா?

nathan

சூப்பர் டிப்ஸ்…

nathan

காலை வேளையில் வரகு அரிசி பருப்பு அடை

nathan

கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான 10 முக்கிய காரணங்கள்!!!

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

வாரத்துக்கு ஒரு முறை இஞ்சி சாறு குடிங்க…பாரம்பரிய மருத்துவ முறை..

nathan

உங்களுக்கு தெரியுமா நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்…!

nathan

சத்தான சுவையான கார்லிக் பிரட்

nathan

வெளியிட்ட தகவல்.. !பரவும் கிருமிகளை அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்..

nathan