மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கடுகு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்வது எப்படி?

வயது முதிர்வு மற்றும் நீடித்த பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக பற்களில் உள்ள எனாமல் பாதிக்கப்படுகிறது. ஆகவே அவற்றிற்கான சிறப்பு பராமரிப்பு தேவைப்படுகிறது. பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள சில அடிப்படை விதிகள் உள்ளன. அதாவது ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்குவது மற்றும் பற்களை வெண்மையாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ளும் உணவு பொருட்களை உட்கொள்வது.

 

நம்மில் பலர் கடைகளில் கிடைக்கும் பற்பசைகளை பயன்படுத்தும் நிலையில், சிலர் வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்க வீட்டில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பல காலங்களுக்கு முன்பாக கடுகு எண்ணெய் மற்றும் உப்பு பயன்படுத்தி பற்களை சுத்தம் செய்து வந்தனர். இந்த இரண்டு பொருட்களின் கலவை பற்களை நல்ல முறையில் சுத்தம் செய்ய உதவுகிறது.

பல் பிரச்சனைகளுக்கான காரணங்கள்

பற்களில் மஞ்சள் கறை படிவது மட்டுமல்லாமல், பற்கள் அழுகுதல், ஈறுகளில் ரத்தம் வடிவது, வீக்கம் உண்டாவது போன்றவை இன்றைய நாட்களில் பற்கள் தொடர்பான பாதிப்புகளாக பார்க்கப்படுகின்றன. பல் தொடர்பான இந்த பாதிப்புகளுக்கு சில பொதுவான காரணங்கள் உள்ளன. அவை,

* சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது.

* சீரற்ற முறையில் பற்களை சுத்தம் செய்வது மற்றும் மோசமான முறையில் வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பது

* பற்களை சுத்தம் செய்வதில் ஒழுங்கற்ற நிலை மற்றும் பல் தொடர்பான பரிசோதனையில் காலம் தாழ்த்துவது.

* அதிக அளவு புகையிலை உட்கொள்ளல்.

* அடர்த்தி அதிகமுள்ள நீரை உட்கொள்வது.

மேலே கூறப்பட்டவை சில பொதுவான காரணங்களாக இருந்தாலும், பற்கள் பாதிப்பிற்கு இன்னும் பல்வேறு காரணங்கள் உள்ளன.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Related Posts” background=”” border=”red” thumbright=”no” number=”4″ style=”grid” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

கடுகு எண்ணெய் மற்றும் உப்பு

பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்கவும், ஈறுகளை சுத்தம் செய்யவும் பல காலமாக பின்பற்றி வந்த தீர்வைப் பற்றி இப்போது காண்போம். உப்பு பற்களில் படிந்துள்ள கறைகளை அகற்றி பற்களுக்கு பிரகாசத்தை தருகிறது. மேலும் பிளூரைட்டின் இயற்கை ஆதாரமாக விளங்குகிறது. இது பற்களுக்கும் ஈறுகளுக்கும் மிகுந்த நன்மை தருகிறது. கடுகு எண்ணெய் ஈறுகளை வலிமையாக்கி எளிய முறையில் கறைகளை நீக்க உதவுகிறது. பொதுவாக ஈறுகளில் கிருமிகள் படிவதால் இந்த கறைகள் உண்டாகின்றன. கடுகு எண்ணெய் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால் கொழுப்பில் கரையும் இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி ஈறுகளில் இரத்தம் வடிதல் தவிர்க்கப்படுகிறது. உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டையும் பயன்படுத்துவதால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறைந்து இரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

பயன்படுத்தும் முறை

* நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு சிட்டிகை அளவு கல் உப்பு எடுத்துக் கொள்ளவும்.

* இதில் சிறிதளவு கடுகு எண்ணெய் சேர்க்கவும்.

* தேவைப்பட்டால் இந்த கலவையில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த கலவையை ஈறுகளில் தடவி லேசாக மசாஜ் செய்யவும். இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்யவும் பிறகு அடுத்த சில நிமி3 brush 1593டங்கள் உங்கள் வாயை மூடிக்கொள்ளவும்.

* அதன் பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு வாயை கொப்பளிக்கவும். இந்த முறையை தொடர்ச்சியாக பின்பற்றவும்.

குறிப்பு

உங்களுக்கு பல் தொடர்பான பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருந்தால் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அவரின் பரிந்துரையின் பேரில் இந்த கலவையை நீங்கள் பயன்படுத்தலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button