ஆரோக்கியம் குறிப்புகள்

ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!!

grab1419825006trai cay co loi cho rang mieng 4 1427908182072
ஆண்களே! இதோ ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள்!!! கிரேப் ஃபுரூட் இந்த பழத்தில் லைகோபைன் என்னும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருக்கிறது. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளான ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்ப வல்லது. பொதுவாக ஆண்மை இழப்பானது 50 வயதிற்கு மேல் தான் ஏற்படும். ஆனால் தற்போது 50 வயதிற்கு உட்பட்டவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கும் ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பெரிதும் அவஸ்தைப்படுகிறார்கள்.

இப்படி ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட்டால், அது அவர்களது ஈகோவை பாதிக்கும். எனவே ஆண்கள் எப்போதும் வலுவுடனும், ஆரோக்கியமான ஆண்மைத்தன்மையுடனும் இருக்க விரும்புவார்கள். ஆனால் அப்படி நினைத்தால் மட்டும் போதாது, ஆண்மை இழப்பு ஏற்படாதவாறு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன், சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆண்களுக்கு இப்படி ஆண்மை இழப்பு மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தற்போதைய வேலைப்பளுமிக்க வாழ்க்கை முறை தான்.

இதனால் மன அழுத்தம் அதிகரித்து, நிம்மதி போய், எதிலும் அவசரமாக இருப்பதால், உடலை ஆரோக்கியமாக பேணிப் பாதுகாக்க முடியவில்லை. ஆகவே எப்போதும் ஆண்மை இழப்பு ஏற்படாமல் இருக்க, உண்ணும் உணவில் ஒருசில பழங்களை சேர்த்து வந்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்களால், விறைப்புத்தன்மை குறைபாடு மற்றும் ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இங்கு ஆண்களுக்கு ஆண்மை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும் பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பழங்களை சாப்பிட்டால், விறைப்புத்தன்மை குறைபாடு, ஆண்மை இழப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button