மருத்துவ குறிப்பு

உங்க வாய் பயங்கரமா நாறுதா? அப்ப தினமும் செய்யுங்க…

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் வாய் சுகாதாரம் என்பது மிகவும் முக்கியம். வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிப்பதாக பல நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே வாய் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். பொதுவாக வாயில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்களை நீக்க பற்களைத் துலக்குவோம். அதற்கு அடுத்ததாக செய்வது மௌத் வாஷ் கொண்டு வாயைக் கொப்பளிப்பது.

ஆனால் கடைகளில் விற்கப்படும் மௌத் வாஷ்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அவை வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன், வாயில் உள்ள இயற்கை தாவரங்களையும் அழிக்கக்கூடும். இதனால் நாளடைவில் வாய் ஆரோக்கியம் மோசமடைகிறது. அதோடு இந்த மௌத் வாஷ்களில் ஆல்கஹால் இருப்பதால், அவை வாயில் வறட்சியை உண்டாக்கக்கூடும். வாய் வறட்சி அதிகமானால், அதுவே வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

ஆகவே தினமும் பற்களைத் துலக்குவதுடன், பற்களின் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்களை நீக்க ப்ளாஷ் செய்ய வேண்டும். அதன் பின் நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். ஒருவேளை நீங்கள் மௌத் வாஷ் பயன்படுத்துபவராக இருந்தால், நேச்சுரல் மௌத் வாஷைப் பயன்படுத்துங்கள். நேச்சுரல் மௌத் வாஷை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று நீங்கள் கேட்கிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எவ்வித பக்கவிளைவையும் உண்டாக்காத சில நேச்சுரல் மௌத் வாஷ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பட்டை மற்றும் கிராம்பு மௌத் வாஷ்

இந்த மௌத் வாஷ் செய்வதற்கு ஒரு கப் நீரில், 10-15 துளிகள் பட்டை எண்ணெய் மற்றும் 10-15 துளிகள் கிராம்பு எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இதை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் அந்த கலவையால் காலை மற்றும் இரவு தூங்கும் முன் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய் துர்நாற்ற பிரச்சனை நீங்குவதோடு மட்டுமின்றி, சொத்தைப் பற்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மௌத் வாஷ்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்து, அத்துடன் 1 கப் உப்பு நீர் மற்றும் வென்னிலா ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தினமும் இந்த கலவையால் வாயைக் கொப்பளிக்கவும். இப்படி செய்வதால் வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு விரைவில் குட்-பை சொல்லலாம்.

புதினா மற்றும் டீ-ட்ரீ ஆயில் மௌத் வாஷ்

ஒரு கண்ணாடி ஜாரில் ஒரு கப் நீர், 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 8-9 புதினா இலைகள் மற்றும் 2 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து, ஜாரை மூடி நன்கு குலுக்க வேண்டும். ஒவ்வொரு முறை இந்த ஜாரில் உள்ள கலவையால் வாயைக் கொப்பளிக்கும் முன்பும், நன்கு குலுக்கி பின்னரே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக இந்த கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கும் போது விழுங்குவதைத் தவிர்க்கவும்.

பார்ஸ்லி மற்றும் புதினா மௌத் வாஷ்

ஒரு பிளெண்டரை எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய பார்ஸ்லி, 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய புதினா, 1 கப் நீர் மற்றும் 1 கப் வோட்கா (விருப்பமிருந்தால்) சேர்த்து நன்கு 2 நிமிடம் அரைக்க வேண்டும். பின் ஒரு வடிகட்டியைக் கொண்டு அரைத்த கலவையை வடிகட்டி, ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி சேகரித்துக் கொள்ள வேண்டும். பின் தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் கலவையை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் துர்நாற்றம் தடுக்கப்படும்.

உப்பு நீர் மௌத் வாஷ்

இது மிகவும் எளிமையான மௌத் வாஷ். இதற்கு தேவையானது எல்லாம் ஒரு கப் நீர், 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 1/2 டேபிள் டீஸ்பூன் பேக்கிங் சோடா தான். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு பாட்டிலில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையால் தினமும் வாயைக் கொப்பளித்து வந்தால், வாய் நன்கு புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் இருக்கும்.1 clovewater 1593

பேக்கிங் சோடா மௌத் வாஷ்

மிகவும் சுலபமான ஒரு மௌத் வாஷ் வேண்டுமென்று நினைத்தால், 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரை வாயில் ஊற்றி, குறைந்தது 30 நொடிகள் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

வினிகர் மௌத் வாஷ்
வினிகரில் அசிட்டிக் அமிலம் உள்ளது. அசிட்டிக் அமில சூழலில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி பெறாது. எனவே வினிகரை மௌத் வாஷாகப் பயன்படுத்துவது வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை 1 கப் நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button