முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! பார்லர் போக முடியலைன்னு ஃபீல் பண்றீங்களா? வீட்டுலயே இந்த ஃபேஸ் பேக் போடுங்க…

மழைக்காலம் வந்தாலே நாம் சோம்பேறியாகிவிடுவோம். பலரும் மழைக்காலத்தில் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்து, சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் அது தான் தவறு. மழைக்காலத்திலும் சரும பிரச்சனைகள் வரும். எனவே கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் எப்படி சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்போமோ, அதேப் போல் குளிர்காலத்திலும் சரியான பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியது அவசியம்.

 

தற்போது கொரோனா பெருந்தொற்றினால் ஆங்காங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு கொரோனா வழக்குகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இந்த காலத்தில் வெளியே செல்வதும் பாதுகாப்பானது அல்ல. குறிப்பாக அழகு நிலையங்களுக்கு செல்வது நல்ல யோசனையும் அல்ல. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை மழைக்காலத்தில் அழகாக ஜொலிக்கவும், பிரச்சனை இல்லாத சருமத்தைப் பெறவும் உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது.

ஓட்ஸ் மற்றும் முட்டை மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் – 3 டீஸ்பூன்

* முட்டை வெள்ளைக்கரு – 1

* தேன் – 1 டீஸ்பூன்

* தயிர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை போடுவது நல்லது.

ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் மாஸ்க்
ஓட்ஸ் மற்றும் ரோஸ்வாட்டர் மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* ஓட்ஸ் – 3 டீஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன்

* தேன் – 1 டீஸ்பூன்

* தயிர் – 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின்பு முகத்தை நீரால் நன்கு கழுவி துடைத்துக் கொள்ளவும். அதன் பின் தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை போட்டால், முகம் பளிச்சென்று அழகாக இருக்கும்.

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
தேவையான பொருட்கள்:

* முல்தானி மெட்டி – 1 டேபிள் ஸ்பூன்

* ரோஸ் வாட்டர் – சிறிது

செய்முறை:

ஒரு பௌலில் முல்தானி மெட்டி பொடியை எடுத்து, அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து, கட்டிகள் இல்லாதவாறு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை ஃபேஸ் பேக் போடுவது நல்லது.

முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை/காம்பினேஷன் சருமத்தினருக்கு சிறப்பானதாக இருக்கும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை தவிர்ப்பது நல்லது. ஆனால் இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்திய பின், தவறாமல் மாய்ஸ்சுசைர் பயன்படுத்துங்கள்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் மாஸ்க்
கடலை மாவு மற்றும் மஞ்சள் மாஸ்க்
தேவையான பொருட்கள்:

* கடலை மாவு – 1 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

* எலுமிச்சை சாறு – 2-3 துளிகள்

* ரோஸ் வாட்டர் – 1-2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு மென்மையாக பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினரைத் தவிர, அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம். இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.

நற்பதமான ஃபுரூட் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

* வாழைப்பழம் – 1 இன்ச் துண்டு

* ஆப்பிள் – 1 இன்ச் துண்டு

* பீச் – 1 இன்ச் துண்டு

* ஸ்ட்ராபெர்ரி – 1

* தேன் – 1 டீஸ்பூன்monsoon facepack 15

செய்முறை:

ஒரு பௌலில் அனைத்து பொருட்களையும் போட்டு, முள் கரண்டி கொண்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிக்ஸியில் போட்டு கூட அரைத்துக் கொள்ளலாம். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button