ஆரோக்கிய உணவு

இதோ எளிய நிவாரணம்! உங்கள் தாடையில் திடீரென்று முடி வளருகிறதா? அதனை எளிதாக எப்படி நீக்குவது?

முகத்தில் முடிகள் இருந்தாலே அது பெண்களின் அழகைக் கெடுக்கும் ஒன்றாகவும் சற்று எரிச்சலை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கும். பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் முடிகள் இருக்கின்றன. மற்றும் சிலருக்கு திடீரென தாடைகளில் முடிகள் முளைத்து சங்கடத்தை ஏற்படுத்தும். இந்த முடிகளை எப்படி நிரந்தரமாக அகற்றுவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் அழகு நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இங்கே உங்களுக்காக நீங்கள் வீட்டில் செய்வதற்கு ஏற்றவாறு சில எளிமையான முறைகள் உள்ளன. இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி எளிமையாக உங்கள் தாடைகளில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றி விடலாம். இவை ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அல்லது பி.சி.ஓ.டி போன்ற பிரச்சினைகளினால் ஏற்படலாம். உங்களுக்கு எந்த பிரச்சினையினால் முடி வளர்ந்தாலும் நீங்கள் பயப்படத் தேவையில்லை இந்த எளிமையான வீடு வைத்திய முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

டீவீஸிர்

எல்லா பெண்களும் கண்டிப்பாக ஒரு முறையாவது டீவீஸிர் பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் இந்த டீவீஸிர் வைத்து அதிகமான முடியை எடுக்க முடியாது. ஒரு சில முடிகளை மட்டுமே எடுக்க முடியும். இது மிகவும் எளிமையான மற்றும் விரைவான முறையில் தாடை முடிகளை எடுப்பதற்கான வழியாகும்.

வேக்ஸிங்
வேக்ஸிங்
உங்கள் முகத்தாடையில் அதிக முடிகள் இருந்தால் நீங்கள் வேக்ஸிங் முறையைப் பின்பற்றலாம். இது நீண்ட நாட்களுக்கு உங்கள் முடியின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.

ப்ளீச்
ப்ளீச் என்பது உங்கள் முகத்தின் நிறத்திற்கு ஏற்ற ப்ளீச்சிங் கிட் கடைகளில் வாங்கி அவற்றை உங்கள் சருமத்தில் அப்ளை செய்வதினால் உங்கள் தாடைகளில் இருக்கும் முடிகளை மறைக்கலாம். இது பல பெண்கள் பின்பற்றும் ஒன்றாகும்.

சர்க்கரை
தாடை முடியை அகற்றச் சிறந்த வீட்டு வைத்திய முறையையும் பயன்படுத்தலாம். சிறிதளவு சர்க்கரை மற்றும் எலுமிச்சை சேர்த்துக் கொதிக்க வைத்து வீட்டிலேயே உங்கள் வேக்ஸிங் தயார் செய்து முடியை அகற்றலாம். இந்த முறை சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்ற ஒன்றாகும்.

பப்பாளி
பப்பாளியில் இயற்கையாக முடியினை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால் முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் ஆனாலும் வெகு நாட்களுக்கு முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

கோதுமை மாவு

கோதுமை மாவினை வைத்து முகத்தில் இருக்கும் முடியினை அகற்றுவது பழங்காலத்திலிருந்து பின்பற்றி வரும் முறையாகும். சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ரப் செய்வதினால் மெது மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து முடி வளர்ச்சியைத் தடுக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button