31.3 C
Chennai
Saturday, Jul 27, 2024
625.500.560.350.160.300.053.8 4
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? இளநீரில் தேன் கலந்து குடித்தால் என்ன அற்புதம் நடக்கும்ன்னு தெரியுமா?

இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது மட்டுமில்லாமல் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. அதே போல தேனிலும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

தயாரிக்கும் முறை

ஒரு டம்ளர் இளநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து கொண்டு, இந்த பானத்தை தினமும் காலையில், உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும்.

  • முதுமைத் தோற்றத்திற்கான அறிகுறிகளாக நரை முடி, சுருக்கங்கள், சோர்வு போன்றவை இருக்கின்றன. இத்தகைய அறிகுறிகள் சிலருக்கு இளமையிலேயே தோன்ற ஆரம்பிக்கின்றன. தேன் மற்றும் இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் செல்கள் சிதைவுறுவதை தாமதப்படுத்தி முதுமைத் தோற்றம் வராமல் தடுக்கும்.
  • நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளித்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • செரிமான பிரச்சனைகளான வயிற்று வலி, இரைப்பை அழற்சி, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவை ஏற்படாமல் தடுப்பதோடு, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
  • உடலில் உள்ள குறிப்பிட்ட ஆக்ஸைடுகள் மற்றும் உப்பு போன்றவை சிறுநீரகங்களில் தேங்கி சிறுநீரக கற்களாக உருவாகும். இளநீரில் தேன் கலந்து குடித்து வந்தால், அது சிறுநீரக கற்களைத் தடுப்பதோடு, அதை கரைத்து எளிதில் வெளியேற்றும்.
  • ஒருவரது இதயம் ஆரோக்கியமற்றதாக இருந்தால் உடலின் அனைத்து உறுப்புக்களும் அபாயத்திற்கு உட்படும். இளநீர் மற்றும் தேனில் உள்ள கனிமச்சத்துக்கள், இதய தசைகளை வலிமைப்படுத்தி இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
  • சர்க்கரை நோய் என்பது முற்றிலும் குணமாகாத ஒரு மெட்டபாலிச நோயாகும். இரத்த சர்க்கரை அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருக்கிறதோ, அந்நிலையில் தான் சர்க்கரை நோய் ஆகும். ஆய்வுகளில் இளநீருடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் அது இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து சர்க்கரை நோயைத் தடுக்கும் என தெரிய வந்துள்ளது.

Related posts

சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம் பழம் சாப்பிடலாமா? அப்ப இத படிங்க ……

nathan

நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையா?

nathan

வெயிலுக்கு மோர்தான் பெஸ்ட்!

nathan

கால்சியம் சத்தை ஈடுகட்ட சத்தான உணவு வகை

nathan

மைதாவில் செய்யும் பரோட்டா உடலுக்கு கெடுதலா?

nathan

சூப்பரான வெள்ளரிக்காய் இஞ்சி ஜூஸ்

nathan

சூப்பர் டிப்ஸ்! இடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்துக் களி

nathan

தெரிஞ்சிக்கங்க… இரவில் தூங்கும் முன்பு இதையெல்லாம் தவறியும் சாப்பிடாதீங்க

nathan

முடி உதிர்வுக்கு குட்பை… அசத்தல் நெல்லிக்காய்!

nathan